பிரபல பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை - சொன்னதை போலவே செய்தார்..!


கன்னட மொழியில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பெங்களூரு சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடையும் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் அமைவது வழக்கம். ஆனால் நடிகை ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியடைந்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். 
 
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை குறித்து ஜெயஸ்ரீ ராமையா வெளியிட்டிருந்த பதிவைப் பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவரை தேற்றினார். 
 

சொன்னதை போலவே செய்தார்..!

 
இதற்கு பின்னரும் கூட அவர் குடும்பத்திலிருந்து விலகி தனிமையில் இருந்ததாக அவரது நண்பர் ஷில்பா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.பின்னர் ஜூலை மாதம் 25ம் தேதி ஃபேஸ்புக் லைவில் வந்த ஜெயஸ்ரீ கூறியதாவது, இதை எல்லாம் நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை. 
 
நான் சுதீப் சாரிடம் இருந்து நிதியுதவியை எதிர்பார்க்கவில்லை. என்னால் மன அழுத்தத்துடன் போராட முடியவில்லை. அதனால் மரணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன். எனக்கு நிதி பிரச்சனை எல்லாம் இல்லை, மன அழுத்தம் மட்டுமே. எனக்கு நிறைய தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. நான் தோற்றுவிட்டேன். 
 
எனக்கு தேவை கருணைக் கொலை என்றார். இந்நிலையில் திங்களன்று குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காததால் ஆஷ்ரமத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். 
 
இதையடுத்து ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை ஆஷ்ரம நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மதனயகனஹல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை - சொன்னதை போலவே செய்தார்..! பிரபல பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை - சொன்னதை போலவே செய்தார்..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.