"தொடர்ந்து ட்ராவல் பண்ணா, லேட் நைட்-ல இதை பண்ணனும்.." - எண்ணெய் வடியும் முகத்துடன் கீ.சு..!

 
தமிழ் சினிமாவில் 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.இவர் ஒரு மலையாள நடிகையாவார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். 
 
அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் விஷால் விக்ரம் என பலருடனும் நடித்து அவருடைய திறமையை வெளிப்படுத்தினார். 
 
பார்த்தவுடன் பத்திக்கும் ஹோம்லியான முகவட்டு, வாட்டசாட்டமான தேகம், எதார்த்தமான நடிப்பு என இளசுகளை தன் வசம் கட்டிப்போட்டார் அம்மணி. கீர்த்தி சுரேஷ் பொதுவாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். 
 
இவருக்கு தெலுங்கு சினிமாவின் பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தது. மலையாளத்தில் இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே அவருடைய திறமையை அதிகம் வெளிப்படுத்தியது. 
 
அனைவருக்குமே தெரியும் தெலுங்கு திரைப்படத்தில் சற்று கவர்ச்சி அதிகமாக இருக்கும். தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாத தெலுங்கில் சற்று கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
 
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுடன் வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் மலையாள படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். 
 
படத்தின் பெயர் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம் எனக் கூறி வருகின்றனர்.இந்நிலையில் மகேஷ் பாபு படத்தில் நீச்சல் உடையில் நடிப்பதாக தகவல் வெளியானது. 
 
இதனை மறுத்த கீர்த்தி சுரேஷ், இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.
 
நடிகைகள் என்றாலே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதுஎழுதப்படாத விதி. அதற்கு, கீர்த்தி சுரேஷ் மட்டும் விதிவிலக்கா என்ன..? வித விதமான போட்டோ ஷூட்களுடன் அடிக்கடி சமுக வலைதள பக்கங்களில் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
 

அந்த வகையில், தற்போது முகம் முழுதும் எண்ணெய் வடிய போஸ் கொடுத்து தொடர்ந்து ட்ராவல் பண்ணிட்டு வந்தாலே லேட் நைட்டில் கூந்தல், முகம், கண்களுக்கு கீழ் என சில கூடுதலான கவனிப்பு தேவை என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"தொடர்ந்து ட்ராவல் பண்ணா, லேட் நைட்-ல இதை பண்ணனும்.." - எண்ணெய் வடியும் முகத்துடன் கீ.சு..! "தொடர்ந்து ட்ராவல் பண்ணா, லேட் நைட்-ல இதை பண்ணனும்.." - எண்ணெய் வடியும் முகத்துடன் கீ.சு..! Reviewed by Tamizhakam on January 31, 2021 Rating: 5
Powered by Blogger.