"45 வயதிலும் இப்படியா..?.." - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..!

 
1997 ஜூலை 4 அன்று வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’, சபா இயக்கிய ‘வி.ஐ.பி; ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே இரண்டு நாயகர்கள்- நாயகியரைக் கொண்ட படங்கள், இரண்டிலுமே சிம்ரன் நாயகியரில் ஒருவராக நடித்திருந்தார். 
 
இவ்விரண்டு படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பாக ‘நேருக்கு நேர்’ படத்தில் தேவா இசையில் ‘மனம் விரும்புதே உன்னை’, ‘எங்கெங்கே எங்கெங்கே’ என சிம்ரனுக்கான இரண்டு பாடல்களையும் இன்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
 
‘வி.ஐ.பி’ படத்திலும் ‘மின்னலொரு கோடி’ பாடலும் அத்தகையதே. கூடுதலாக அந்தப் பாடலில் சிம்ரனின் தோற்றப் பொலிவும் நடனமும் கோடி மின்னல்கள் தோன்றி மறைவதன் பரவசத்தை இளம் ரசிகர்களுக்கு அளித்தன. 
 
அதே ஆண்டு வெளியான ’ஒன்ஸ் மோர்’, ‘பூச்சூடவா’, படங்கள் சிம்ரனைக் கவனிக்க வைத்தன. 2004இல் திருமணமாகும் வரை புகழின் உச்சியிலிருந்தார் சிம்ரன். கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் (ஒரு மலையாளப் படம்), மாதவன், பார்த்திபன், முரளி என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். 
 
முன்னணிக் கதாநாயகியாக இருந்தபோதே ‘பார்த்தேன் ரசித்தேன்’ திரைப்படத்தில் வில்லியாக நடித்துப் புகழ்பெற்றார். அந்தப் படத்தின் மையமே அவரது கதாபாத்திரம்தான். 
 
அதை உணர்ந்து வெகு சிறப்பாக நடித்துப் படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.திருமணம், குடும்பம், குழந்தைகள் என சில காலம் ஆளே காணமால் போனார். 
 
இந்நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஹிந்தியில் வெளியான, அந்தாதுான் படம், தமிழில் ரீமேக் ஆகிறது. இதில், தபு நடித்த பாத்திரத்தில், சிம்ரன் நடிப்பது உறுதியாகியுள்ளது. 
 
ரீமேக் உரிமத்தை தியாகராஜன் வாங்கியுள்ளார். இதில், நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். ஜே.ஜே.பிரட்ரிக் படத்தை இயக்க உள்ளார்.தபு பாத்திரத்தில் சிம்ரன் நடிப்பது மட்டுமின்றி, பிரசாந்த் - சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இணைந்து நடிப்பது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து, சிம்ரன் கூறுகையில், இந்திய சினிமாவில், அந்தாதுான் ஒரு மைல்கல் படம். தபு பாத்திரத்தில் நான் நடிப்பது, பெரிய பொறுப்பு. சவாலான அப்பாத்திரத்தில் மட்டுமின்றி, மீண்டும் பிரசாந்த் உடன் நடிப்பது மகிழ்ச்சி, என்றார்.


 
தற்போது, 45 வயதாகும் இவர் வெளிநாட்டு வீதிகளில்பேண்ட்அணியாமல், குட்டியான ட்ரவுசர் மட்டும் அணிந்து கொண்டு ஊர் சுற்றிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

"45 வயதிலும் இப்படியா..?.." - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..! "45 வயதிலும் இப்படியா..?.." - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.