நடிகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாகக் கலந்துகொண்டு வரும் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டியை நடத்திய தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அவரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார். “ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் ஒரு படத்தைத் தயாரிக்க உங்களை அழைத்தால், அதில் இந்தியாவிலிருந்து ஒரு நடிகரை நடிக்க அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் உங்களுடைய விருப்பம் யார்?” என்று கேட்டார்.
உடனே பதிலளித்த ஜேசன் சஞ்சய், “கண்டிப்பாக அப்பாதான்” என்று உறுதியாகக் கூறினார். மேலும், “இந்தப் பேட்டியை ஜேசன் ஸ்டாதம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.
விஜய் தனது மனைவி சங்கீதாவிடமிருந்து பிரிந்து வாழ்கிறார் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருந்தாலும், அதை மனதில் வைத்துக்கொள்ளாமல், தனது தந்தையைப் பற்றி வெளிப்படையாகவும் அன்பாகவும் பேசிய ஜேசன் சஞ்சய்யின் இந்தப் பதில், சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
ரசிகர்கள் பலரும், “தந்தையை விட்டுக் கொடுக்காத மகன்” என்று அவரைப் பாராட்டி பதிவுகள் போட்டு வருகின்றனர்.
‘சிக்மா’ படத்தின் ப்ரமோஷன்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜேசன் சஞ்சய்யின் இந்தக் குடும்ப உணர்வு வெளிப்பாடு, ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
Summary in English : Jason Sanjay, director of the upcoming film Sigma and son of Tamil Nadu Chief Minister Vijay, said in a YouTube interview that if Hollywood star Jason Statham asked him to bring an Indian actor, he would choose his father. Fans have praised his open support online.
