"ஏம்மா.. எக்சர்சைஸ் பண்ண வேற இடமே கிடைக்கலயா..?" - ரெஜினாவை கலாய்க்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..!


கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
 
கன்னட மொழி படங்களில் நடித்து வந்த ரெஜினா கசாண்ட்ரா, 2005ம் ஆண்டு பிரசன்னா, லைலா நடித்த கண்டநாள் முதல் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், பார்ட்டி, Mr.சந்திரமௌலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 
 
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், தமிழில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இந்நிலையில் நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு பட திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது. 
 
இந்த ரகசிய நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், தன் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு திருமண வாழ்வை ரெஜினா துவங்க உள்ளதாகவும் ஒரு கூறப்பட்டது. 
 

 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏரியில் மிதக்கும் படகின் மீது நின்று சிட் அப்ஸ் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏம்மா எக்சர்சைஸ் பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

"ஏம்மா.. எக்சர்சைஸ் பண்ண வேற இடமே கிடைக்கலயா..?" - ரெஜினாவை கலாய்க்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! "ஏம்மா.. எக்சர்சைஸ் பண்ண வேற இடமே கிடைக்கலயா..?" - ரெஜினாவை கலாய்க்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on February 03, 2021 Rating: 5
Powered by Blogger.