"இதயமே... ஓ..ஓ.. இவளிடம்.. ஓ.ஓ... உருகுதே..." - துளி மேக்கப் இல்லாமல் செல்ஃபி - திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. இவர் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். 
 
அதுமட்டுமல்லாமல் சப்போர்ட் நாயகியாகவும் நடித்து பிரபலமடைந்தவர், பின்பு தமிழ் சினிமாவில் அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.
 
சமீபத்தில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகிய அரண்மனை-2 பேய் திரைப்படத்தில் கதாநாயகியாக வலம் வந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பெரிய அளவில் வெற்றி பெற்றது. 
 
இதனைத் தொடர்ந்து மீண்டும் பேய் படத்தில் நடித்தால் வெற்றி கிடைக்குமென நாயகி திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 
 
பின்புதான் விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்தில் நடித்த த்ரிஷா ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். 
 
தற்பொழுது இவர் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் விளம்பரப் படங்களிலும் நடித்து காசு பார்த்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். 
 
சொல்லப்போனால், சினிமாவை விட விளம்பர படங்கள் தான் திரிஷாவை நன்கு பிரபலபடுத்தின. தற்போதும்,விளம்பர படங்கள் என்றால் சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடித்து கொடுக்கிறார் திரிஷா.படங்களில் நடித்தால் எப்போதாவது தான் மக்கள் தன் முகத்தை பார்பார்கள். ஆனால், விளம்பரங்களில் நடித்தால் தினமும் பார்பார்கள் என்கிறார் திரிஷா.
 
1999-ல் மிஸ் மெட்ராஸ் போட்டியில் வென்றதில் இருந்து, கோலிவுட்டின் விருப்பமான நடிகையாக மாறுவது வரை, த்ரிஷா நீண்ட தூரம் வந்துவிட்டார். த்ரிஷா தனது வயதை விட எப்போதும் இளமையாக இருக்கிறார். 
 
வண்ணமயமான உடைகள் மற்றும் அலங்காரம் ஆகியவற்றில், த்ரிஷா தனது ஸ்டைலை உயர்த்தியுள்ளார்.இந்நிலையில், துளி மேக்கப் இல்லாமல் தன்னுடைய செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் திரிஷா.
 


இதனை பார்த்த ரசிகர்கள், இதயமே... ஓ..ஓ.. இவளிடம்.. ஓ.ஓ... உருகுதே.. என்று பாடல் பாடி வர்ணித்து வருகிறார்கள்.

"இதயமே... ஓ..ஓ.. இவளிடம்.. ஓ.ஓ... உருகுதே..." - துளி மேக்கப் இல்லாமல் செல்ஃபி - திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..! "இதயமே... ஓ..ஓ.. இவளிடம்.. ஓ.ஓ... உருகுதே..." - துளி மேக்கப் இல்லாமல் செல்ஃபி - திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2021 Rating: 5
Powered by Blogger.