"நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே.." - சுனைனா வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..!

 
நடிகை தேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. 
 
இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் “மாசிலாமணி” படத்தில் நகுலுடன் இணைந்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். 
 
வம்சம், நீர் பறவை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார். என்ன தான் திறமையான ஹீரோயினாக இருந்தாலும், ஓவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களை நடிக்க மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தார். 
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான தெறி படத்தில், ஒரு சின்ன கேரக்டரில் தலைகாட்டினார். கடந்த ஆண்டு நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக நடித்த சில்லு கருப்பட்டி படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஒரு குடும்ப தலைவியாக இவர் வெளிப்படுத்திய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் கிடைத்தது. 
 

 
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது Fingertip என்ற வெப்சீரிஸீல் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு சூடான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிகவும் வைரலாகி வருகிறார். 
 
இவருக்கு வெப் சீரியல் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். அடுத்து வரவிருக்கும் வெப்சீரிஸ் இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியாக காட்சி அளிக்க போகிறாராம் என்று செய்திகள் வெளியாகின. 
 
இந்த வெப்சீரிஸ் நிறைய ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் சூட்டைக் கிளப்பும் காட்சிகள் போன்ற பல காட்சிகள் இடம் பெற்றுள்ளனவாம். அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கப் போவதாக கூறப்படுகிறது.
 
மேலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள ட்ரிப் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அம்மணி.
 
மேலும், படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே என்று புலம்பி வருகின்றனர்.எதற்கு இப்படி கருத்து தெரிவித்துள்ளனர் என்று தெரியவில்லை. 😉

"நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே.." - சுனைனா வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..! "நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே.." - சுனைனா வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.