"வெள்ள ஃபிகரு.. ரிச்சு கேர்ள்.." - கவர்ச்சி உடையில் இளசுகளை கவர்ந்த சென்னை 28 பட நடிகை..!


மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை சனா அல்தாப். எர்ணாகுளத்து பொண்ணு. லால் ஜோஸ் இயக்கிய விக்ரமாதித்யன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மரியம் முக்கு, ராணி பத்மினி படங்களில் நடித்தார். 
 
தற்போது பாஷரிண்டே பிரேமலேகானம் படத்தில் நடித்து வருகிறார். சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் ஜெய் ஜோடியாக நடிக்கிறார். 
 
துல்கர் சல்மான், பகத் பாசில் என மலையாளத்தில் நடித்து விட்டு தமிழில் நடிகர் ஜெய்-க்கு ஜோடியாக சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்தது பற்றி கூறுகையில், சென்னை 28 செம ஜாலியான டீம். இந்த படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானதில் மகிழ்ச்சி. 
 
கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். ஆக்ஷன் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது" என்றார் சனா.வெங்கட் பிரபு படத்தில் கிளாமரை காட்டி ஒப்பேத்தாமல் கதையை நகர்த்தும் வலுவான கதாபாத்திரமாம் சனாவுக்கு. 
 
 
தனது முதல் தமிழ் படத்திலேயே நல்ல கதாபாத்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் சனா.தமிழ் பேசி நடிக்க கஷ்டப்பட்ட சனாவுக்கு வெங்கட் பிரபு உதவியுள்ளார். 
 
 
அவரை தனது குருவாக நினைக்கும் சனா சென்னை 28 II படம் கோலிவுட்டில் தனக்கு நல்லதொரு ஆரம்பம் என்று நினைக்கிறார்.கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது வளர்ந்து வரும் கீர்த்தி, லட்சுமி மேனன், மஞ்சிமா மோகன் என பலரும் கேரளாவில் இருந்து வந்தவர்கள்.
 
 
தமிழ் திரையுலகில் தற்போது வேகமாக வளர்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் பார்க்க அவரை போன்றே இருக்கும் சனா அல்தாப் கோலிவுட் வந்துள்ளார்.


இணையத்தில் ஆக்டிவாக வளம் வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வெள்ளை பிகரு.. ரிச்சு கேர்ள் என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

"வெள்ள ஃபிகரு.. ரிச்சு கேர்ள்.." - கவர்ச்சி உடையில் இளசுகளை கவர்ந்த சென்னை 28 பட நடிகை..! "வெள்ள ஃபிகரு.. ரிச்சு கேர்ள்.." - கவர்ச்சி உடையில் இளசுகளை கவர்ந்த சென்னை 28 பட நடிகை..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.