"எனக்கும் அந்த பழக்கம் இருந்தது.." - இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்லை - திரிஷா ஒப்பன் டாக்..!


சென்னை அழகியாக மிஸ் சென்னை நிலையில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆன திரிஷா இரு பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவே கோலோச்சி சாதனை படைத்துவிட்டார்.
 
அவர், இந்தப் பொது முடக்க காலத்தில், டிஜிட்டல் ஒரு போதை என்று கூறி சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளர். ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரையும் கூறியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது (இப்போவுமா..இருக்கு"?). 
 
 
இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் நடிகைகள் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர். இந்த பொது முடக்க காலத்தில் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலரும், தங்களது திறமைகளை, எழுத்துகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
எழுத்தாளர்கள் தாங்கள் சந்தித்த பிரபலங்கள் தங்களுடன் பழகியவர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுத்து என பலவற்றை சமூக ஊடகங்களில் தினந்தோறும் எழுதி வெளிப்படுத்தி வருகின்றனர் நடிகர்களும் தங்களது அனுபவங்களை பொழுது போகாமல் ஓரிரு வரிகளில் படங்களுடன் வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
நடிகைகள் பலரும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமான போஸ்களில் புகைப்படங்களையும் பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களது இருப்பை ரசிகர்கள் உடனான உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தி வருகின்றனர். 


இந்நிலையில் த்ரிஷா போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று கூறியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருக்கும் சமயத்தில் டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒரு போதை எனவும், அதனை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். முடிந்தவரை அதில் சிக்கிக் கொள்ளாமல் தங்களுடைய எண்ணங்களை வேறு விஷயங்களில் திசை திருப்புங்கள் கூறியுள்ளார்.

இளம் வயதில் எனக்கும் சமூக வலைத்தளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தும் பழக்கம் இருந்தது, இதை சொல்வதற்கு எனக்கு கூச்சமில்லை எனவும் அதிலிருந்து மீள்வதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது தான் என்னுடைய வாழ்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


"எனக்கும் அந்த பழக்கம் இருந்தது.." - இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்லை - திரிஷா ஒப்பன் டாக்..! "எனக்கும் அந்த பழக்கம் இருந்தது.." - இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்லை - திரிஷா ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.