ஆடையின்றி என்னை போட்டோ எடுத்து மிரட்டுகிறார் - இயக்குனர் மீது பிரபல தமிழ் சீரியல் நடிகை புகார்..!


துணை இயக்குனர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.வி.நடிகை பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புகாரில் குற்றம்சாட்டி உள்ளார். 
 
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். இவருக்கு தற்போது 24 வயது ஆகின்றது. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். 
 
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். 
 
கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். 
 
திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார். அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இயக்குனர் வேலை போய்விட்டது. 
 

அதனால் என்னை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். ரூ.2.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன். என்னை மிரட்டி ஆடையின்றி இருக்கும் கோலத்தில் படம் பிடித்தார். அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டார். அடித்து துன்புறுத்தினார். அவர் மீது மணலி போலீசில் புகார் கொடுத்தேன். 
 
போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார் வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி தொடர்ந்து மிரட்டுகிறார். நான் ஆடையின்றி இருப்பது போல எடுத்த படங்களை அவரிடம் இருந்து போலீசார் மீட்டுத் தரவேண்டும். 
 
அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆடையின்றி என்னை போட்டோ எடுத்து மிரட்டுகிறார் - இயக்குனர் மீது பிரபல தமிழ் சீரியல் நடிகை புகார்..! ஆடையின்றி என்னை போட்டோ எடுத்து மிரட்டுகிறார் - இயக்குனர் மீது பிரபல தமிழ் சீரியல் நடிகை புகார்..! Reviewed by Tamizhakam on April 23, 2021 Rating: 5
Powered by Blogger.