திடீரென இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Nayanthara - ஷாக் ஆன ரசிகர்கள்..! - என்ன காரணம்ன்னு பாருங்க..!

 
தமிழ் திரையுலகில் தற்போது டாப் காதல் ஜோடியாக வலம் வருவது நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுடைய காதல் ஜோதி ஒளிவீசி வருகிறது. ஷூட்டிங், ஃபாரின் டூர் என நயன்தாரா எங்கு சென்றாலும் விக்கி இல்லாமல் போவது கிடையாது. 
 
இதுதொடர்பான ஏராளமான போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. கடந்த டிசம்பர் மாதம் 14ம் ஐதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட ஷூட்டிங் நடைபெற்றது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கின் போது அதில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 
 
இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அனைவரும் சென்னை திரும்பினர். அப்போது கூட காதலி நயன்தாராவை விக்கி தான் பத்திரமாக அழைத்து வந்தார். அப்போது நயனை அக்கறையுடன் கைபிடித்து அழைத்து வந்த விக்கியின் போட்டோஸ் லைக்குகளை குவித்தது. 
 
 
டிசம்பர் 23ம் தேதி ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021 மார்ச் 15ல் மீண்டும் சென்னையில் தொடங்கியது. முதலில் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
 
 
கொரோனா 2வது தீவிரமடைந்து வருவதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதனிடையே அண்ணாத்த பட ஷூட்டிங்கில் நயன்தாராவும் பங்கேற்றுள்ளார். 


“அண்ணாத்த” பட ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக சற்று முன் தனி விமானத்தில் ஐதராபாத்தில் தரையிரங்கிய நயன்தாராவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால், இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இல்லாததை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இது என்னப்பா எட்டாவது உலக அதிசயம் என்று கலாய்த்து வருகிறார்கள்.

திடீரென இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Nayanthara - ஷாக் ஆன ரசிகர்கள்..! - என்ன காரணம்ன்னு பாருங்க..! திடீரென இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Nayanthara - ஷாக் ஆன ரசிகர்கள்..! - என்ன காரணம்ன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on April 27, 2021 Rating: 5
Powered by Blogger.