"நீங்க அதை பாத்தீங்களா..?.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம் - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பேசப்படும் நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், 1996 ல் ராம்பன்டு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிக்க வந்தார்.2011 ல் அவர்களும் நானும் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 
 
தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். 2015 ல் இவர் நடித்த காக்கா முட்டை படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
 
தற்போது தமிழில் பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் ரீமேக் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
 
படங்களுடன் வெப் சீரிஸ், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் குரல் கொடுத்துள்ளார்.காக்கா முட்டை, கனா, தர்மதுரை படங்களுக்கான சிறந்த நடிகை மற்றும் துணை நடிகை விருதுகளை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார்.
 
இன்றைய தேதியில் பிசியான நடிகை யார் என்று கேட்டால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். க.பெ.ரணசிங்கம் படத்திற்கு பிறகு சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். 
 
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தில் சமையல் அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண் அதிலிருந்து விடுவிட்டு விடுதலையாகி சுதந்திர காற்றில் பறக்கும் புரட்சிப் பெண்ணாக நடிக்கிறார். அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கும் புதிய படத்திலும் ஐஸ்வர்யா நடிக்கிறார். இதுவும் ஹீரோயின் சப்ஜெக்ட் படமாகும்.
 
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற இன்னொரு படமான அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கிறார். தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனா என்ற படத்தில் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறார். 
 
தனி ஒரு பெண்ணாக போராடி தனக்கு வரும் ஒரு பெரிய பிரச்சினையையும் சமாளித்து குடும்பத்தை காப்பாற்றுகிற கேரக்டர். இதுதவிர தமிழில் பூமிகா, திட்டம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 
 
நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் வெளிவர வேண்டியது உள்ளது. ரிபப்ளிக், டக் ஜெகதீஷ் என்ற தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
 

 
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு ஒரு ப்ரொடக்ட் ப்ரமோஷன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நீங்க அதை பாத்தீங்களா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

"நீங்க அதை பாத்தீங்களா..?.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம் - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..! "நீங்க அதை பாத்தீங்களா..?.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம் - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 10, 2021 Rating: 5
Powered by Blogger.