போட்டோஷூட்டில் குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்.. - தீயாய் பரவும் வீடியோ..!

 
தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், போட்டோஷூட் எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கிறார். இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திகா சிங். 
 
இவர் குத்துச்சண்டை விளையாட்டு வீராங்கனையான ஆவார். தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்த இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 
 
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது.சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.
 
இதற்கிடையில் நடிகைகள் பலர் அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலிருந்து வருகிறனர். 
 
இந்த வகையில் ரித்திகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை. 
 
 
இந்நிலையில், ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து இருக்கிறார்.


 
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

போட்டோஷூட்டில் குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்.. - தீயாய் பரவும் வீடியோ..! போட்டோஷூட்டில் குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்.. - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on July 19, 2021 Rating: 5
Powered by Blogger.