"அந்த விஷயத்தில் மாறுவதாக இல்லை.." - சமந்தா கணவரை விவகாரத்து செய்ய இது தான் காரணமாம்..!


தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு நாளுக்கு நாள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் சமந்தா சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கியிருந்தார். 
 
அப்போதில் இருந்து இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது விரைவில் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வழக்கு தொடர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போவதாக பேச்சாக உள்ளது. நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவை பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனாவின் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா கூடுதல் கவர்ச்சி காட்டி வருகிறார். 
 
சமந்தா கவர்ச்சியாக நடிப்பது மற்றும் போட்டோஷூட்டுகளில் கலந்து கொள்வது அவரின் கணவரின் குடும்பத்தாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக சமந்தவிடம் பல முறை பேசியும் பலனில்லையாம். ஏற்கனவே கவர்ச்சி பிரச்சனை இருந்த நேரத்தில் சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் அத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தது புகுந்த வீட்டில் மேலும் பிரச்சனையாகிவிட்டதாம். 
 

சமந்தா தன் கெரியர் விஷயத்தில் மாறுவதாக இல்லாததால் விவாகரத்து வரை வந்திருக்கிறதாம். பிரிவது என்று முடிவு எடுத்த பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை கவுன்சிலிங் பெற்றார்களாம். கவுன்சிலிங்கிற்கு பிறகும் அவர்கள் மனம் மாறவில்லையாம். விவாகரத்து நடப்பது உறுதி என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

"அந்த விஷயத்தில் மாறுவதாக இல்லை.." - சமந்தா கணவரை விவகாரத்து செய்ய இது தான் காரணமாம்..! "அந்த விஷயத்தில் மாறுவதாக இல்லை.." - சமந்தா கணவரை விவகாரத்து செய்ய இது தான் காரணமாம்..! Reviewed by Tamizhakam on September 23, 2021 Rating: 5
Powered by Blogger.