"குறியீடு எல்லாம் கிடையாது.." - நேரடியாக போட்டு பொழக்கும் மோகன் ஜி..! - தெறிக்கும் ருத்ரதாண்டவம் ஸ்நீக் பீக்...!


திரெளபதி என்ற திரைப்படத்தின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் மோகன்ஜி. இவருடைய அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
 
ரிச்சர்ட்ஸ், தர்ஷா குப்தா, கெளதம் மேனன், ராதாரவி, தம்பிராமையா, மாளவிகா, அவினாஷ், மாரிமுத்து, ஒய்ஜி மகேந்திரன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் திரௌபதி படம் போலவே வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் இவாங்களிஸ்ட்கள் கிருஸ்துவர்கள் என்ற போர்வையில் ஊழியம் என்ற பெயரில் நடத்தி வரும் அட்டூழியங்களை பட்டவர்த்தனமாக காட்டும் விதமாக படத்தின் கதையம்சம் செதுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இந்த படத்தில் ஸ்நீக் பீக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குறியீடெல்லாம் இல்லாமல் நேரடியாகவே சொல்ல வந்ததை பொட்டு பொட்டு என போட்டு பொழந்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. 
 
இதோ அந்த ஸ்நீக் பீக்.. 
 

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--