"விவாகரத்து குடுத்துடுறேன்.. ஆனா.. இது மட்டும் வேணாம்..!.." - சமந்தா விவாகரத்து குறித்து பரபரப்பு தகவல்..!


கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நாகசைதன்யா - சமந்தா பிரிவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமந்தா, நாக சைதன்யா இருவருமே இன்று மதியம் இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக தாங்கள் கணவன் - மனைவி என்கிற குடும்ப உறவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்திருக்கிறார்கள். 
 
இருவரின் அறிக்கையிலும் பெயர் மட்டுமே மாறி இருந்ததே தவிர வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. சமந்தா சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர். ‘மாஸ்கோவின் காவேரி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். 
 
ஆனால், இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடத்தார்.
 
 
தமிழில் சிம்பு - த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நாக சைதன்யா - சமந்தா நடித்தனர். இது நாக சைதன்யா, சமந்தா இருவருக்குமே இரண்டாவது படம்.கடந்த சில தினங்களாகவே நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. 
 
ஆனால் இருவருமே இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடாமல் இருந்தனர். தற்போது முதன்முறையாக நாக சைதன்யா - சமந்தா இருவரும் கூட்டாக பிரிந்துவிட்டோம் என்று அறிவித்துள்ளனர். 
 
இருவரையும் சேர்த்துவைக்கப் பலரும் முயன்று முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் ஜீவனாம்சம் குறித்து பேச்சுகள் ஆரம்பித்திருக்கின்றன. நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜூவனாம்சாகத் தர முன்வந்திருக்கிறது. ஆனால், ‘’நான் விவாகரத்துக்கு சம்மதிக்கிறேன். ஆனால், எனக்கு எந்த பண உதவியும் வேண்டாம். நான் நன்றாக சம்பாதிக்கிறேன்’’ என மறுத்திருக்கிறார் சமந்தா.
"விவாகரத்து குடுத்துடுறேன்.. ஆனா.. இது மட்டும் வேணாம்..!.." - சமந்தா விவாகரத்து குறித்து பரபரப்பு தகவல்..! "விவாகரத்து குடுத்துடுறேன்.. ஆனா.. இது மட்டும் வேணாம்..!.." - சமந்தா விவாகரத்து குறித்து பரபரப்பு தகவல்..! Reviewed by Tamizhakam on October 02, 2021 Rating: 5
Powered by Blogger.