தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின் தம்பி நகுலுடன் காதலில் விழுந்தேன் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அந்த படத்தில் இருவரும் கெமிஸ்ட்ரியும் வேற லெவலுக்கு ஒர்க் அவுட் ஆனதை அடுத்து, மாசிலாமணி படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர்.
அந்த படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பின்னர் தமிழில் சுனைனாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெறி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்தரகனிக்கு ஜோடியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நகுலுடன் இணைந்து "எரியும் கண்ணாடி" படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டாத சுனைனா, சோசியல் மீடியாவில் வெளியிடும் சில புகைப்படங்களில் கவர்ச்சி எட்டி பார்க்க ஆரம்பித்தது.
இந்நிலையில், கடற்கரையில், நீச்சல் உடையில் ஷவர் அமைத்து அதனடியில் நின்று அப்படி இப்படி அசைவுகளை வெளிப்படுத்தியுள்ள அவரது வீடியோ ஒன்று இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
Tags
Sunainaa