மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா மற்றும் மீனா ஆகியோர் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பட பூஜையில் நயன்தாரா, மீனாவை அவமரியாதையுடன் நடத்தியதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், நயன்தாரா தொடர்ந்து ஆட்டிடியூட் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஏற்கனவே விஜய் டிவி தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) நயன்தாராவுடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தது தற்போது மீண்டும் चर्चाக்கு வந்துள்ளது.
பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் Media circle என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், "டிடி ஒரு பேட்டியில் நயன்தாராவை குறிப்பிட்டு ஒரு சம்பவத்தை சொல்லியிருந்தாங்க.
அப்போ அந்த போட்டோவும் வெளியாகி இருந்தது. நயன்தாராவை பேட்டி எடுக்க டிடி முதல்ல வந்து உட்கார்ந்துட்டாங்க. பிறகு நயன்தாரா வந்திருக்காங்க. அப்போதான் டிடி தான் கட்டியிருந்த சேலையும், நயன்தாரா கட்டியிருந்த சேலையும் ஒரே மாதிரியான கோல்டன் கலர்ல இருந்ததை கவனிச்சிருக்காங்க. ரெண்டு பேரும் ஒரே மாடல், ஒரே பேட்டர்ன்ல சேலை கட்டியிருந்தாங்க.
உடனே டிடி நயன்தாரா கிட்ட, 'நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரியான சேலையை கட்டியிருக்கோம் போலியே? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை'ன்னு ஆச்சரியமா சந்தோஷமா சிரிச்சிருக்காங்க.
அதுக்கு நயன்தாரா, 'உங்க கிட்ட வேற சேலை இருக்கா? வேற சேலை இருந்தா மாத்திட்டு வர முடியுமா?'ன்னு கேட்டாங்களாம். இதை கேட்டதும் டிடிக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. என்ன இப்படி கேட்குறாங்களேன்னு ஒரு மாதிரியாகிவிட்டதாம்.
நயன்தாரா மாதிரி ஒரு பெரிய பிரபலத்திடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை டிடி எதிர்பார்க்கலையாம். ஆனா, டிடிகிட்ட அந்த நேரத்துல வேற மாற்று சேலையும் இல்ல. உடனே அங்கிருந்த ஷோ புரடியூசர்கள் நேரமாகிடுச்சு, ஷோவுக்கு போகலாம்னு ஒரு வழியா சமாளிச்சு அந்த பேட்டியை எடுக்க வச்சிருக்காங்க.
நயன்தாராவும் வேண்டா வெறுப்பா அந்த பேட்டியை கொடுத்திருக்காங்க" என்று அந்த சம்பவத்தை விவரித்தார். மேலும், டிடி இதுகுறித்து வேறொரு நிகழ்ச்சியில் பேசியதை நினைவு கூர்ந்த பாலாஜி பிரபு, "நயன்தாரா யாரா வேணும்னாலும் இருக்கட்டும், எந்த உடையை வேணும்னாலும் போட்டுக்கட்டும். நான் ஆங்கரிங் பண்றவங்க. எனக்கு பிடிச்ச உடையை நான் போட்டு வந்துருக்கேன்.
நான் ஷோ ஆங்கரிங் பண்ணும்போது, அதுக்கான மேக்கப், காஸ்ட்யூம்ல கவனம் செலுத்துவது வழக்கம். என்னுடைய விருப்பத்துக்கு உடை அணிபவள் என்றாலும், அந்த நேரத்துல அந்த பிரபலம் கேட்டது எனக்குள்ள சின்ன முள் குத்தின மாதிரி இருந்துச்சு, மனசுல தைச்சிருச்சுன்னு டிடி சொல்லியிருந்தாங்க" என்றார்.
இவை எல்லாவற்றையும் குறிப்பிட்ட பாலாஜி பிரபு, "இதெல்லாம் தப்பு. இதுபோன்ற ஆட்டிடியூட் காட்டுவதை நயன்தாரா முழுமையாக தவிர்க்கணும். திறமை இருந்தாலும் பணிவு வேணும்.
உயரத்துக்கு போனாலும் பணிவு தன்னாலேயே வரணும். சினிமாவை பொறுத்தவரை திறமை 50 சதவீதம், பணிவு 50 சதவீதம் இருக்கணும்னு சொல்லுவாங்க.
இதுக்கு சிறந்த உதாரணம் தேனிசை தென்றல் தேவாவை சொல்லலாம். பல ஹிட்களை தந்தும், உச்சத்துக்கு போனதுக்கு அப்புறமும் பணிவு அவர்கிட்ட இருக்கும். எல்லாருக்கும் மரியாதை தந்து பேசுபவர்" என்று தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து, கேரளாவில் இருந்து ஓட்டை பஸ்ஸில் வந்து சென்னையில் கொட்டப்பட்ட குப்பை தான் நயன்தாரா தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை மறந்து போயிட்டு தற்போது தமிழ் சினிமாவில் திமிர் தனமாக நடந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.
இதெல்லாம் அவருடைய தவறு இல்லை இவரை கொண்டாட கூடிய தமிழர்களின் தவறு என்று கருத்துக்களை இணைய பக்கங்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்