22 வயசுல முதல் தடவை அந்த பிரச்சனையை சந்தித்தேன்.. ரகசியம் உடைத்த நடிகை சைத்ரா ரெட்டி..!

தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தில் காவல் அதிகாரியாகவும், விஷமக்காரன் படத்தில் ஹீரோயினாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். 

சன் டிவியின் கயல் தொடரில் நடித்ததன் மூலம் ‘கயல்’ என்றே ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், அடுத்த மாதம் (ஜூலை 23, 2025) 30 வயதை எட்டுகிறார். இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள இவர், கன்னட தொடர்களில் தொடங்கி தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். 

chaithra Reddy Tamil serial actress car incident interview 

2016ல் விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பிரியா பவானி சங்கருக்கு பதிலாக அமித் பார்கவுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். சமீபத்திய கலாட்டா யூடியூப் பேட்டியில், சைத்ரா தனது ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்களைப் பகிர்ந்தார். 

22 வயதில் தமிழ் மொழி தெரியாமல் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிக்கத் தொடங்கியபோது, “பிரியாவுக்கு பதில் இவர் யார்? நடிக்கவே தெரியவில்லை” என சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும், இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுததாகவும் கூறினார். 

இருப்பினும், இந்த நெகட்டிவிட்டியை கடந்து வெற்றி பெற்றார். பேட்டியில், தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட புடவைகளைப் பற்றியும் பேசினார். “பயன்படுத்திய புடவையை மீண்டும் மீண்டும் அணிவேன். 

திருப்பதிக்கு செல்லும்போது சிவப்பு புடவையையும், தங்க நிற புடவையை ஃபேவரைட்டாகவும் அணிவேன்,” என்றார். மேலும், மதுரவாயல் சாலையில் நடந்த கார் சம்பவம் பற்றி பகிர்ந்த அவர், “எனது கார் உரசவில்லை என்று தெரிந்தாலும், ஒருவர் கூச்சலிட்டு 2000 ரூபாய் கேட்டார். 

பிரச்னையை தவிர்க்க பணம் கொடுத்து விட்டு கிளம்பினேன்,” என இன்னொசன்ட்டாக கூறினார். சைத்ராவின் இந்த பேட்டி, அவரது எளிமையான பேச்சு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தற்போது திருமணமாகி, ராகேஷ் சாமலாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் சைத்ரா, தொடர்ந்து சின்னத்திரை மற்றும் சினிமாவில் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--