தமிழ் சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி மற்றும் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ரிஹானா பேகம் முதலில் மௌனமாக இருந்தார். ஆனால், தற்போது சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜ்கண்ணன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் உண்மையில் அழகர்சாமி என்ற பெயரில் மோசடி பேர்வழி என தெரிவித்து, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

ரிஹானா பேகம், பிரபலமான சன் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு ஹபீபுல்லாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரிஹானா, வேளச்சேரியில் ரெஸ்டோ-பார் நடத்தி வந்த ராஜ்கண்ணனை அறிமுகமாகி, நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
2024 ஜனவரி 20 அன்று, கோபாலபுரத்தில் உறவினர் வீட்டில் ராஜ்கண்ணன் தன்னை திருமணம் செய்ததாகவும், தாலி கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அவர் புகார் அளித்தார்.
பூட்டிய அறைக்குள் இருவரின் திருமணமும் நடந்துள்ளது. பட்டுப்புடவை அணிந்தபடி காதலனை இறுக்கி அனைத்த படி நின்றிருக்கும் நடிகை ரிஹானாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார் காதலன்.
இந்த சம்பவம் நடந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து தாலி தான் தெரியாம கட்டியாச்சு என நடிகை ரிஹானா காதலனுக்கு மெசேஜ் செய்துள்ளார். (இந்த கூத்தை பற்றி அடுத்த இந்த லிங்கில் விரிவான விளாசல் படிக்கலாம்) இதன் மூலம், ரிஹானாவின் அனுமதி இல்லாமல்.. அல்லது அவருக்கு தெரியாமல் தாலி காட்டியுள்ளார் காதலன் ராஜ் கண்ணன்.

தொடர்ந்து பேசிய, ரிஹானா தன்னை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் பறித்ததாகவும், தயாரிப்பாளர்களுடன் “அட்ஜஸ்ட்மென்ட்” செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ரிஹானா, ராஜ்கண்ணன் உண்மையில் அழகர்சாமி என்றும், பான் கார்டு, ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை மாற்றி, அடையாளத்தையே மாற்றியவர் என்றும் தெரிவித்தார்.
அவர் தன்னை ஏமாற்றி, ரெஸ்டோ-பார் தொழிலுக்கு 15 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், பாலியல் தொழில் ஏஜென்டாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் வீட்டில் கத்தி, அரிவாள், கோகைன் போன்ற போதைப் பொருட்கள் வைத்திருப்பதாகவும், இளம் பெண்களை வைத்து மோசடி செய்வதாகவும், தன்னை பிளாக்மெயில் செய்து மிரட்டியதாகவும் ஆதாரங்களுடன் கூறினார்.
ரிஹானா, ஆவடி காவல் ஆணையரகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் மனு அளித்து, ராஜ்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், தன்னை பல பெண்கள் எச்சரித்ததாகவும் தெரிவித்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில், அழகர்சாமி 80 லட்சம் ரூபாய்க்கு மைனர் பெண்ணை இணைத்து அரசியல் சதி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary : Tamil serial actress Rihana Begum faced fraud allegations from businessman Rajkannan, who claimed she cheated him of ₹20 lakh and married him deceitfully. In a press meet, Rihana refuted the claims, revealing Rajkannan as Alagarsamy, a fraud who changed his identity, blackmailed her, and engaged in illegal activities. She filed a complaint, and police are investigating.


