கல்லூரி மாணவி கர்ப்பம்.. காதலனை கைகாட்டிய மாணவி.. டிஎன்ஏ சோதனையில் ட்விஸ்ட்.. நிஜமான டியூடு கதை..

நாகர்கோவில், அக்டோபர் 24: தீபாவளி அன்று வெளியான 'டூட்' படத்தின் சர்ச்சை கதையை நினைவூட்டும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட அரங்கேரி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் காவல்துறையையும் சமூகத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தனியார் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் படிப்பு நடத்தும் 22 வயது மாணவி சுசித்ராவின் கர்ப்ப ரகசியம் வெளிப்பட்டதன் மூலம், அவளது அம்மாவின் தம்பி மகன், 19 வயது செல்வத்துடன் நடந்த உல்லாச உறவு தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம், ட்யூட் படத்தின் கதை அம்சங்களைப் போன்றது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பான விவரங்களின்படி, சுசித்ரா தன்னுடன் படிக்கும் சகமாணவன் ராஜேஷை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார்.

இருவரும் நெருக்கமாகப் பழகியிருந்தனர். ஆனால், நான்கு மாசம் கர்ப்பமாக இருப்பதாக சுசித்ரா தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததும், அது கல்லூரி நிர்வாகத்தையும் பெரும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதன் பிறகு, விசாரணையில் சுசித்ரா, "எனது கர்ப்பத்திற்கு ராஜேஷ்தான் காரணம்" என்று கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜேஷ், காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். "இருவரும் காதலிக்கிறோம். ஆனால், இதுவரை உறவு கொண்டது இல்லை. இந்தக் கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல" என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார். இதன் பிறகு, விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறை, சுசித்ராவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி பெற முயன்றது.

இதை அறிந்த சுசித்ராவின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் உண்மையைப் பகிர்ந்த சுசித்ரா, தனது கர்ப்பத்திற்கு உண்மையான காரணம் அம்மாவின் தம்பி மகன் செல்வம் என்று ஒப்புக்கொண்டார்.விசாரணையில் தெரியவந்த விவரங்களின்படி, 22 வயது சுசித்ராவும் 19 வயது செல்வமும் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அடிக்கடி உல்லாச உறவில் ஈடுபட்டு வந்தனர். இது ஒரு வாடிக்கையாக மாறியிருந்தது.

எதிர்பாராத வகையில் கர்ப்பமான சுசித்ரா, தனது காதலன் ராஜேஷ் மீது பழியைத் தூக்கி எறிந்து, உண்மையை மறைத்துள்ளார். இப்போது, விசாரணையில் அவளது 'குட்டு' வெளிப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், சமீபத்தில் வெளியான 'ட்யூட்' படத்தின் கதையைப் போன்றது என்று காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ட்யூட் படத்தில், அத்தை மகனுடன் காதல் கொண்ட பெண், அத்தை மகன் காதலை ஏற்க மறுத்ததும்.. அதைத் தனது நண்பருடன் காதல் பூத்து, பின்னர் அத்தை மகனையே திருமணம் செய்து, ஆனால், நண்பருடன் குழந்தை பெற்று இந்த சமுதாயத்திற்கு அவசர தேவையான (இதை நம்பலனா பிற்போக்குவாதி ஆகிடுவீங்க..) இது போன்ற 'முற்போக்கு' கதையை இயக்குனர் சமர்ப்பித்திருந்தார்.

இதை விமர்சித்த ரசிகர்கள், "இது உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாதது" என்று புலம்பினார்கள். ஆனால், அந்தப் படம் சர்ச்சைக்குப் பிறகு 100 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி பெற்றது. மக்கள் "அப்படி என்னதான் இருக்கிறது" என்று திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்தனர்.

இந்நிலையில், உண்மை வாழ்க்கையில் இதே போன்ற அலங்கோலம் நடந்திருப்பது சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்கிறது. காவல்துறை வட்டாரங்களின்படி, சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சுசித்ராவின் குடும்பத்தினர் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், இளைஞர்களிடையே உள்ள உறவுகள் மற்றும் குடும்ப பொறுப்புகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, இது மிகவும் சோகமான சம்பவம். விசாரணை தொடர்கிறோம். சட்ட ரேதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இந்த அதிர்ச்சி சம்பவம், 'ட்யூட்' படத்தின் சர்ச்சையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

Summary : In Kanyakumari, 22-year-old student Susithra falsely accused boyfriend Rajesh of her four-month pregnancy. Investigation revealed the real culprit: her 19-year-old maternal cousin Selvam, with whom she had a secret affair. This shocking incest mirrors the controversial 'Dude' film's plot, which grossed 100 crores despite backlash, leaving the family devastated.