மனைவியின் தோழி மகளை ரூமுக்குள் அழைத்து பயங்கரம்.. வெறியனின் மகள் அதை விட கேவலம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..

சென்னை, நவம்பர் 20, 2025 : செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கு, தாயின் நண்பியின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதைவிட கொடுமை என்னவென்றால், அந்த வன்கொடுமையைத் தடுக்காமல், தகப்பனை காப்பாற்ற முயன்ற அவரது மகளும் சிறுமியை மிரட்டி, ஆதாரங்களை அழித்து, மனரீதியாக துன்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் தாயார் எஸ்தர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) TET தேர்வு எழுத ராயப்பேட்டை சென்றிருந்தார். அப்போது உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பி கற்பகத்துக்கு பண உதவி செய்ய விரும்பிய அவர், தனது தங்கச் செயினை மகளிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

சிறுமி செயினுடன் சர்ச் அருகே காத்திருந்த போது, கற்பகத்தின் மகள் சந்தியா வந்து அழைத்துச் சென்று நகையை அடமானம் வைத்தார். பின்னர், "வீட்டுக்கு வந்து சாப்பிடலாம்" என்று கூறி, இரும்புலியூர் நர்மதா தெருவில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சந்தியாவின் தந்தை சங்கர் அன்புடன் வரவேற்றார். சந்தியா குளிக்கச் சென்றதும், சங்கர் சிறுமியை அறைக்குள் அழைத்து கதவைப் பூட்டி, வாயைப் பொத்தி கொடூர பாலியல் வன்கொடுமை செய்தார். "அக்கா... சந்தியா அக்கா..." என்று கதறியும் இரக்கமின்றி தாக்குதல் நடத்தினார். மாதவிடாய் நேரம் என்று கூறியும் கேட்கவில்லை.

பின்னர் சிறுமி தப்பி ஓடி குளியலறை கதவைத் தட்ட, சங்கர் மிரட்டி அமைதியாக இருக்கச் சொன்னார். குளித்து வெளியே வந்த சந்தியா, நடந்ததை அறிந்தும் தந்தையை காப்பாற்ற முனைந்தார்.

சிறுமியை தனி அறையில் அடைத்து, ஆடைகளை கழற்றச் சொல்லி "காயம் பார்க்கிறேன்" என்ற பெயரில் தொட்டு அத்துமீறினார். ஆதாரங்களை அழித்தார். "யாரிடமும் சொன்னால் உன் போட்டோக்களை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன்" என்று மிரட்டினார்.

தாயாரிடம் பேச விடாமல் போனை பறித்தார். பயத்தில் திரும்பிய சிறுமி, மன உளைச்சலால் கடிதம் எழுதிவிட்டு மாத்திரைகள் விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். பிரபல கல்லூரி அருகே மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சையின் போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் POCSO சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கொடூரன் சங்கரையும், அவரது மகள் சந்தியாவையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

தாயின் நம்பிக்கையைப் பயன்படுத்தி நிகழ்ந்த இக்கொடூரம் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வக்கிரத்தில் செய்தாலும், வஞ்சத்தில் செய்தாலும் குற்றம் ஒருநாள் தண்டனை பெறும் என்பதை இது நிரூபிக்கிறது.

Summary : A 16-year-old schoolgirl in Tambaram was sexually assaulted by her mother's friend's husband, Shankar, while visiting their home. His daughter Chandiya, instead of helping, forcibly examined the victim, destroyed evidence, and threatened to morph and leak photos to silence her. Traumatized, the girl attempted suicide but survived. Both father and daughter were arrested under POCSO Act.