மனைவியின் தோழி மகளை ரூமுக்குள் அழைத்து பயங்கரம்.. வெறியனின் மகள் அதை விட கேவலம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..
சென்னை, நவம்பர் 20, 2025 : செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கு, தாயின் நண்பியின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைவிட கொடுமை என்னவென்றால், அந்த வன்கொடுமையைத் தடுக்காமல், தகப்பனை காப்பாற்ற முயன்ற அவரது மகளும் சிறுமியை மிரட்டி, ஆதாரங்களை அழித்து, மனரீதியாக துன்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தாயார் எஸ்தர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) TET தேர்வு எழுத ராயப்பேட்டை சென்றிருந்தார். அப்போது உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பி கற்பகத்துக்கு பண உதவி செய்ய விரும்பிய அவர், தனது தங்கச் செயினை மகளிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். சிறுமி செயினுடன் சர்ச் அருகே காத்திருந்த போது, கற்பகத்தின் மகள் சந்தியா வந்து அழைத்துச் சென்று நகையை அடமானம் வைத்தார். பின்னர், "வீட்டுக்கு வந்து சாப்பிடலாம்" என்று கூறி, இரும்புலியூர் நர்மதா தெருவில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சந்தியாவின் தந்தை சங்கர் அன்புடன் வரவேற்றார். சந்தியா குளிக்கச் சென்றதும...