ராஜஸ்தான், அஜ்மர். செப்டம்பர் 18, 2025. விடியற்காலை நான்கு மணி. சவுப்பத்தி பகுதியின் இருண்ட சாலையில் போலீஸ் ஜீப் மெதுவாக ஊர்ந்து சென்றது. ஹெட் கான்ஸ்டபிள் கோவிந்த் சர்மா ஜீப்பை ஓட்டினார்.
அவரது டிரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தான். இந்தப் பகுதி எப்போதும் ஆபத்தானது – சுற்றிலும் காடுகள், புதர்கள், அண்ணாசாகர் ஏரி. ஸ்ட்ரீட் லைட்கள் குறைவு. கிரைம்கள் நடப்பதற்கு ஏற்ற இடம்.
திடீரென, ரோடின் நடுவே இரு உருவங்கள் தெரிந்தன. ஒரு இளைஞன், ஒரு பெண். 25-30 வயது இருக்கும். இருவரும் எதையோ தேடுவது போல நடந்து கொண்டிருந்தனர். கோவிந்த் சர்மாவுக்கு சந்தேகம். ஜீப்பை நிறுத்தினார்.

"என்ன செய்துகொண்டிருக்கீங்க? இந்த நேரத்தில் இங்கே?" என்று கேட்டார்.
இளைஞன் பதில் சொன்னான்: "சார், என் பெயர் அல்கேஷ் குப்தா. 32 வயது. உத்தரப் பிரதேஷ், வாரணாசி என் சொந்த ஊர். இங்கே ஒரு ரெஸ்டாரண்டில் வேலை செய்கிறேன்."
பெண்ணைப் பார்த்து: "இவள் யார்?"
"சார், இவள் என் மனைவி அஞ்சலி. 28 வயது. நாங்கள் இருவரும் வாரணாசியைச் சேர்ந்தவர்கள். வேலைக்காக அஜ்மருக்கு வந்தோம். அவள் அந்த ரெஸ்டாரண்ட்டின் ஹோட்டலில் வேலை செய்கிறாள்."
கோவிந்த் சர்மாவுக்கு கொஞ்சம் சந்தேகம் தீர்ந்தது. ஆனால், "இந்த நேரத்தில் என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்கேஷ் தயங்கினான். அஞ்சலி கண்களில் கண்ணீர்.
"சார்... நைட்டு 10:30க்கு என் மனைவி எங்கள் மூன்று வயது மகள் காவியாவுடன் விளையாடிக்கொண்டிருந்தார், அப்போது ஒரு போன் கால் வந்தது. போன் பேசி முடிந்ததும் பார்த்தால்... குழந்தையை காணோம் சார்!"
கோவிந்த் சர்மா அதிர்ந்தார். நைட்டு 10:30 மணிக்கு குழந்தை காணாம போயிருக்கு.. இப்போ மணி 04:30.. அப்போ, ஆறு மணி நேரமாக தேடுகிறார்களா? போலீஸில் கம்ப்ளெய்ண்ட் ஏன் கொடுக்கவில்லை?
அஞ்சலி அழுதாள்: "சார், போலீஸ் வேண்டாம். நாங்களே தேடிக்கொள்வோம். குழந்தை அடிக்கடி ஓடிப்போய் திரும்பி வந்துவிடும். இப்போதும் கிடைத்துவிடும்."
கோவிந்த் சர்மாவுக்கு சந்தேகம் அதிகரித்தது. உடனே வாக்கி-டாக்கியில் தகவல் அனுப்பினார். போலீஸ் டீம் வந்தது. தேடுதல் தொடங்கியது.
மறுநாள் காலை 10 மணி. அண்ணாசாகர் ஏரியில் ஒரு சின்ன உடல் மிதந்தது. காவியா. இறந்துவிட்டாள்.
போஸ்ட்மார்ட்டம்: நீரில் மூழ்கி இறப்பு. ஆனால், விபத்தா? கொலையா?
விசாரணை தீவிரமானது. அஞ்சலியும் அல்கேஷும் ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களது கதை சிதறியது.
உண்மை: அஞ்சலி வாரணாசியில் ராஜு சிங்கை மணந்திருந்தாள். காவியா அவர்களுக்கு பிறந்தாள். ஆனால், அஞ்சலி தன்னுடைய மேனேஜர் அல்கேஷ் குப்தாவுடன் தகாத உறவு வைத்துக்கொண்டாள்.
ராஜூ வெளியே போனதும், மேனேஜர் அல்கேஷை வீட்டிற்கு அழைத்து தனிமையில் உல்லாசம். ஒரு கட்டத்தில், ராஜு இதை தெரிந்துகொண்டு டிவோர்ஸ் கேட்டார். கோர்ட் டிவோர்ஸ் கொடுத்தது. நஷ்ட ஈடு, ஜீவனாம்சம் என எதுவும் இல்லை. குழந்தை அஞ்சலியுடன்.
அஞ்சலியும் அல்கேஷும் அஜ்மருக்கு ஓடினர். லிவ்-இன். ஆனால் அல்கேஷ் குழந்தை காவியாவை விரும்பவில்லை. "இது வேறு ஆளோட குழந்தை. எனக்கு ஏன் செலவு?" என்று தினமும் திட்டினான்.
அஞ்சலி மன வேதனையில் ஆழ்ந்தாள். ஒரு நாள் இரவு, காவியாவை தூங்க வைத்து, ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றாள். குழந்தை தூங்கியதும்... ஏரியில் தள்ளினாள்.
பிறகு, அல்கேஷை அழைத்து, "குழந்தை தொலைந்துவிட்டது" என்று நாடகமாடினாள்.
சிசிடிவி உண்மையை காட்டியது. அஞ்சலி குழந்தையுடன் தனியாக ஏரிக்கு சென்றாள். ஆனால், தனியாக. திரும்பி வந்த காட்சிகள்.
விசாரணையில் அஞ்சலி ஒப்புக்கொண்டாள்: "சார், அல்கேஷ் தினமும் திட்டினான். பணம் இல்லை. கல்யாணம் கூட செய்ய முடியவில்லை. முதல் கணவர் ராஜு மேல் கோபம். குழந்தை இறந்தால் அவன் பாதிக்கப்படுவான் என்ற எண்ணமும் வந்தது. நான்தான் ஏரியில் தள்ளினேன்."
அல்கேஷ் மறுத்தான்: "சார்.. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் குழந்தை இடையூறாக இருக்கிறது என சொன்னது உண்மை. நான் குழந்தையை அவருடைய தந்தையிடம் ஒப்படைக்க சொன்னேன். ஆனால், கொலை செய்ய சொல்லவில்லை சார்.. அவள் தனியாக செய்தாள்."
ஆனால் போலீஸ் இருவரையும் கைது செய்தது. கொலை வழக்கு.
ஏரி அமைதியாக இருந்தது. ஆனால், அதன் ஆழத்தில் ஒரு மூன்று வயது குழந்தையின் கண்கள் பார்த்த கடைசி காட்சிகளும்.. நான் என்ன அம்மா பாவம் செய்தேன்.. ஏன் அம்மா.. என்று ஏரியின் நீருடன் அந்த குழந்தையின் கண்ணீரும்..கலந்து இருந்தது.
கதை முடிந்தது. ஆனால் சில கதைகள் முடிவதில்லை. அவை எச்சரிக்கையாக மாறுகின்றன.
Summary in English : In Ajmer, Rajasthan, a mother named Anjali finished her 3-year-old daughter Kavya by drowning her in Ana Sagar Lake. She did this out of frustration over financial struggles and resentment toward her ex-husband, while living with her lover Alakesh. Police uncovered the truth through CCTV footage and investigation.
