தனியாக இருக்கும் போது நான் இதை பண்ணுவேன்.. இதை சொல்ல எனக்கு கூச்சமில்லை.. நானும் மனுஷிதானே.. நித்யா மேனன் ஓப்பன் டாக்..

நடிகை நித்யா மேனன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் அனுபவங்கள் மற்றும் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் தனுசுடன் திருச்சிற்றம்பலம், இட்லி கடை, ரவி மோகனுடன் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களிலும், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த தலைவன் தலைவி படத்திலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நித்யா மேனன்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது குழந்தைப் பருவம் முதல் தற்போதைய வாழ்க்கை வரை பகிர்ந்துள்ளார். "நான் 3 மாத குழந்தையாக இருந்தபோது, அம்மா வேலைக்குச் செல்லும் போது என்னை பாட்டியின் மடியில் வைத்துவிட்டுச் செல்வார்.

அம்மாவின் இடத்தை பாட்டியே நிரப்பினார். அதனால் நான் மற்றவர்களை விட வித்தியாசமான பெண்ணாக வளர்ந்தேன். நண்பர்கள் இருந்தாலும், தனியாகவே இருப்பதை விரும்புவேன்" என்று கூறினார்.

காதல் குறித்து பேசிய அவர், "குறிப்பிட்ட வயதில் எனக்கு காதல் அனுபவம் கிடைத்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ, அத்தனை முறையும் என் இதயம் உடைந்து போனது.

ஒரு ஆத்ம துணை வேண்டும், அவருடன் அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவுகள் இருந்தன. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது எல்லா உணர்வுகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

திருமணம் குறித்த தனது கருத்தை விளக்கிய நித்யா, "வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று எந்த நிபந்தனையுடனும் வாழவில்லை.

ஆத்ம துணை கிடைத்தால் நாளையே திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இப்போது எனக்கு இருக்கும் தனிமை வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. தனிமையில் இருக்கும் போது அதை நான் ரசிக்கிறேன். இதை சொல்வதற்கு கூச்சப்படவில்லை.

நானும் மனுஷிதானே. ரத்தன் டாட்டாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுபோல் நானும் தனிமையை மிகவும் ரசிக்கிறேன். திருமணம் நடந்தால் மகிழ்ச்சி... நடக்கவில்லை என்றால் அதைவிட மகிழ்ச்சி" என்று கூறினார்.

மேலும், தற்போது ஆன்மீக பாதையை பின்பற்றுவதாகவும், அதன் மூலம் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நித்யா மேனனின் இந்த திறந்த மனப்பான்மை கொண்ட பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திருமணம் மற்றும் உறவுகள் குறித்த சமூக அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு, தனது சொந்த வழியில் மகிழ்ச்சியைத் தேடும் அவரது அணுகுமுறை பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

Summary : Nithya Menen shared that her grandmother raised her while her mother worked. She prefers solitude, has experienced heartbreak in relationships, and now finds joy in being alone. Open to marriage if she finds a soulmate, she currently embraces single life happily and follows a spiritual path for inner peace.