மட்டன் கறிக்குழம்பில் 15 வயாகரா மாத்திரைகள் மயங்கி துடித்த கணவன்! மேலே ஏறி காதல் மனைவி செய்த அசிங்கம்!
தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டம், சப்தகிரி காலனியில் ஒரு சாதாரண வீடு. அங்கு வசித்தவர் கத்தி சுரேஷ். 35 வயதான அவர் ஒரு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2015-ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த மௌனிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள். ஆரம்பத்தில் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது. ஆனால், காலப்போக்கில் சுரேஷின் மது பழக்கம் தீவிரமடைந்தது. குடித்துவிட்டு வீடு திரும்பும் போதெல்லாம் மனைவியை அடித்து, துன்புறுத்தத் தொடங்கினார். வீட்டில் அமைதி இல்லாமல் போனது. உறவில் விரிசல் விழுந்தது. மௌனிகா தாங்க முடியாமல் தவித்தாள். சுரேஷ் வேலைக்குச் செல்லாமல், அவளிடமிருந்து பணம் பறித்து செலவு செய்யத் தொடங்கினார். வீட்டுச் செலவு, குழந்தைகளின் படிப்பு எல்லாமே சிரமமானது. இந்த நெருக்கடியில் மௌனிகா தவறான பாதையில் சென்றாள். பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினாள். அதன் மூலம் வரும் பணத்தையும் சுரேஷ் பறித்துக்கொண்டான். அடி, உதை, சித்திரவதை தொடர்ந்தது. இந்த நிலையில் மௌனிகாவுக்கு அஜய் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனுடன் அக்ரம உறவு வளர்ந்தது. "மீதி வாழ்க்கையை இவனுடன் ...