37 வயது ஆசிரியை கர்ப்பம்! சிக்கிய இரண்டு மாணவர்கள்! விசாரணையில் வெளிவந்த காது கூசும் ரகசியம்!

ஜார்கண்ட் மாநிலத்தின் சாத்ரா என்ற ஒரு ஊரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள் பிரமிளா. வயது 37. மிகவும் அமைதியானவள். மாணவர்களிடம் அன்பாகப் பழகுபவள். ஆனால் அவளது கண்கள் எப்போதும் ஏதோ ஒரு ஆழமான சோகத்தை மறைத்திருந்தன.ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, கணவர் ராஜசேகர் என்ற அரசு ஊழியருடன் இனிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். 

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென ராஜசேகர் இதய நோயால் இறந்து போனான். அதிலிருந்து பிரமிளா உள்ளுக்குள் உடைந்து போனாள். ஆனால், வேலையை விடவில்லை. மாணவர்களே அவளது ஆறுதலாக இருந்தனர்.ஒரு நாள் காலை... வழக்கம்போல வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஆனால் அன்று அவளால் நிற்க முடியவில்லை. 

தலை சுற்றியது. மயங்கி விழுந்தாள். மாணவர்கள் பதறினர். உடனடியாக சக ஆசிரியர்களுக்கு தகவலை சொல்லவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.மருத்துவர் சொன்ன வார்த்தைகள் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தின."நீங்கள் ஐந்து மாசம் கர்ப்பிணியா இருக்கீங்க.."பிரமிளாவால் நம்ப முடியவில்லை. கணவர் இறந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. எப்படி? எப்போது? அவள் திகைத்துப் போனாள். 

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே மாதவிடாய் ஏற்படும் என்பதால், தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்றே தெரியாமல் ஐந்து மாதம் வாழ்ந்து வந்திருக்கிறார் பிரமிளா. ஆனால், அது தான் உண்மை. அவளது உடல் அவளுக்கு ஒரு ரகசியத்தை மறைத்திருந்தது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், அவள் அமைதியாக இருந்தாள். யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அவளது முகத்தில் ஒரு புதிய ஒளி தெரிந்தது. "இது ராஜசேகரின் குழந்தைதான்... அவன் என்னை விட்டுப் போகவில்லை" என்று மகிழ்ச்சியடைந்தாள். தன்னுடைய பெற்றோர், உறவினருக்கு இந்த தகவலை தெரிவித்து மகிழ்ந்தாள்.

ஆனால்... அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோர் அவளைத் தனியாகப் பார்த்து பேசத் தொடங்கினர். முதலில் "மேடம், உங்களுக்கு உடம்பு சரியில்லையா?" என்று கேட்டனர். பிறகு... "எங்களுக்கு எல்லாம் தெரியும்" என்று மெல்லிய குரலில் சொன்னார்கள்.

பிரமிளா அதிர்ந்து போனாள்."என்ன தெரியும்?""எல்லாம் தெரியும் மேடம்... உங்க கணவர் இறந்து நான்கு மாசம் ஆகுது. ஆனா நீங்க கர்ப்பமா இருக்கீங்க. எப்படி சாத்தியம்?"அவர்கள் இருவரும் ஒரு மாலை நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த பழைய ஆய்வக அறையில் பிரமிளாவைப் பார்த்திருந்தனர். 

அப்போது, பிரமிளா ஒரு இளைஞருடன் மிக நெருக்கமாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததை புகைப்படமாக எடுத்தனர்."இது உங்களோட எக்ஸ் லவ்வர்ன்னு எங்களுக்கு தெரியும்.. இதை யாருக்கும் காட்டல... ஆனா எங்களுக்கு கொஞ்சம் பணம் வேணும். இல்லேனா... இந்த புகை எல்லா வாட்ஸ்ஆப் குரூப்புக்கும் போயிடும். உங்க பேரு, பள்ளி பேரு... எல்லாம் கெட்டுப் போகும்."மிரட்டல் தொடங்கியது.

பிரமிளா பயந்தாள். ஆனால் அவள் பணம் கொடுக்க மறுத்தாள். "நான் எதுவும் தப்பு செய்யல. இது என் கணவரோட குழந்தை" என்று அழுதாள்.ஆனால், அவர்கள் நம்பவில்லை. அல்லது நம்ப விரும்பவில்லை.நாளுக்கு நாள் மிரட்டல் அதிகமானது. பள்ளி வாசலில் காத்திருப்பார்கள். 

இரவு தூக்கம் இல்லாமல் அழைப்பார்கள். "நாளைக்கு பணம் இல்லேனா... உங்க அம்மா, உங்க சகோதரர் எல்லாருக்கும் அனுப்புறோம். இது உங்களோட எக்ஸ் லவ்வர்ன்னு உங்க அம்மா, அண்ணனுக்கு நல்லாவே தெரியும்.. நீங்க உங்க ஹஸ்பன்ட் குழந்தைன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க.."

ஐந்தாம் மாதத்தில்... அவளது வயிறு தெரிய ஆரம்பித்தது. மாணவர்கள் பார்த்துவிட்டனர். வதந்திகள் பரவின.ஒரு இரவு...பிரமிளா தனியாக வீட்டில் இருந்தாள். கண்ணீருடன் தரையில் உட்கார்ந்திருந்தாள். 

மொபைலில் ஒரு செய்தி வந்தது."நாளைக்கு காலை 10 மணிக்கு பள்ளி பின்புறம் வாங்க. பணம் இல்லேனா... உன் கர்ப்பத்தைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். உன் குழந்தைக்கு அம்மா இல்லாம போயிடும்."அந்த செய்தி மாணவன் கார்த்திக் அனுப்பியது.பிரமிளா அழுதபடியே எழுந்தாள். கண்ணாடி முன் நின்றாள். தன் வயிற்றைத் தொட்டாள்.அடுத்த நாள் காலை...

அவரது படுக்கையறையில், ஒரு உடல் தொங்கிக் கொண்டிருந்தது. பிரமிளா. தூக்கில் தொங்கியிருந்தாள்.பள்ளி அதிர்ந்தது. ஊர் அதிர்ந்தது.காவல்துறை விசாரணை தொடங்கியது.

மரண வாக்குமூலம் எதுவும் இல்லை. ஆனால் அவளது மொபைலில் இருந்த செய்திகள், அழைப்பு வரலாறு... எல்லாம் கார்த்திக் மற்றும் விஷ்ணு பெயர்களை சுட்டிக்காட்டின.இருவரும் கைது செய்யப்பட்டனர்.முதலில் மிரட்டல் மட்டுமே என்று சொன்னார்கள். 

ஆனால் தீவிர விசாரணையில்... இருவரும் உடைந்து அழுதனர்."எங்களுக்கு பணம் வேணும் மட்டும்தான்... ஆனா அவங்க ஒருநாள் எங்களை பார்த்து சொன்னாங்க... 'நீங்க என்னை மிரட்டுறதால நான் என் குழந்தையை இழக்க நேரிடும். அதைவிட நான் இறந்துடுறேன்'னு...""அதுக்கு அப்புறம்... நாங்க இன்னும் அதிகமா மிரட்டினோம். அவங்க உண்மையாவே செஞ்சுட்டாங்க...

"விசாரணை அதிகாரி அதிர்ந்து போனார்."அவங்க கர்ப்பமா இருந்ததை நீங்க தெரிஞ்சிருந்தீங்களா?""தெரியும் சார்... நாங்க தான் அவங்க மயங்கி விழுந்த அன்னைக்கு அவங்க கூட ஹாஸ்பிடல்க்கு போனோம்.. ஆனா அவங்க கணவர் இறந்து ஐந்து மாசம் ஆகிடுச்சுனு... அதான் நாங்க நினைச்சோம்... வேற யாரோடயோ..."

அவர்கள் சொன்ன வாக்குமூலம் எல்லாரையும் மிரண்டு போக வைத்தது.பிரமிளா உண்மையில் தன் கணவரின் குழந்தையைத்தான் சுமந்திருந்தாள். கணவர் இறக்கும் முன் இருந்த கடைசி நாட்களில்... அவர்கள் இணைந்திருந்தார்கள். 

ஆனால் அது யாருக்கும் தெரியவில்லை. அவளுக்கு இருந்து மாதவிடாய் பிரச்சனை காரணமாக கர்ப்பம் தாமதமாகத் தெரிந்தது.மிரட்டலால் பயந்து... சமூகத்தின் பார்வையைப் பொறுக்க முடியாமல்... தன் குழந்தையை இழக்க நேரிடும் என்று நினைத்து... அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

ஆனால் அந்த ஊரில் இன்றும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது...உண்மையான கொலையாளி யார்? மிரட்டிய மாணவர்களா...அல்லது அவளைத் தனிமையில் விட்டுச் சென்ற சமூகமா...அல்லது அவளே தன் மனதை மிரட்டிக் கொண்டாளா?

தற்போது ஆசிரியை கல்லறையில், மாணவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளியில்...

இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. சம்பவம் நடந்த இடம் மற்றும் பெயர்கள் கற்பனை.

Summary in English : A 37-year-old widowed Tamil teacher becomes pregnant five months after her husband's passing. Two students blackmail her using a misleading photo, leading to deep distress. She ends her life, leaving the community in shock.