மகளை கொலஐ செய்தது ஏன்? கைதான தந்தை கூறிய புதிய காரணம்! கேட்டு மிரண்டு போன போலீசார்!

சேலம்: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த 22 வயது ஹோமியோபதி மருத்துவ மாணவி வர்ஷினி காதல் விவகாரம் தொடர்பாக தனது வளர்ப்புத் தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தை வரதராஜன் (51) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் என்ன நடந்தது?

சேலம் அருகே சித்தர் கோவில் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த வர்ஷினி, கல்லூரி அருகேயுள்ள லட்சுமணன் வீட்டு அடுக்குமாடி அறையில் தோழியுடன் தங்கியிருந்தார்.

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி காலை, தோழி ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது அறை வெளியில் தாளிடப்பட்டிருந்தது. கதவைத் திறந்து பார்த்தபோது வர்ஷினி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

தந்தையே முதல் சந்தேக நபர்

மாணவியின் தந்தை வரதராஜன் கொலை நடந்த நாள் மாலை அவரது அறைக்கு வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டுச் சென்றதாக தகவல் கிடைத்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வர்ஷினியின் செல்போனும் காணாமல் போனது.

வரதராஜன் மீது நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 25 நாட்களுக்கும் மேலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. செல்போன் டிராக்கிங் மூலம் அவர் சென்னை வடபழனி கோயிலுக்கு சென்றது தெரிய வந்தது.

அங்கு மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மகளின் செல்போனை குளத்தில் வீசியுள்ளார். பின்னர் திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் தலைமறைவாக இருந்துள்ளார்.

கைது எப்படி நடந்தது?

தேடுதல் தீவிரமடைந்த நிலையில், வரதராஜன் மனைவியை சந்திக்க வள்ளியூர் சென்றபோது தப்பித்துச் சென்றார். இறுதியாக சேலம் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

விசாரணையில் வரதராஜன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் சாராம்சம்:

  • வர்ஷினி கடந்த சில மாதங்களாக திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு ஆணுடன் (சில தகவல்களின்படி டேக்வாண்டோ பயிற்சியாளர் / சித்த மருத்துவர்) தொடர்பில் இருந்துள்ளார்.
  • அந்த நபருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும் வர்ஷினி உறவைத் தொடர்ந்துள்ளார்.
  • பலமுறை போனிலும், நேரிலும் கெஞ்சி, எச்சரித்து, காலில் விழுந்து கேட்டும் வர்ஷினி காதலை கைவிட மறுத்துள்ளார்.
  • ஆத்திரத்தில் அறைந்தபோது மயங்கி விழுந்த வர்ஷினியை, தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.
  • பின்னர் அறையை வெளியில் தாளிட்டு தப்பியுள்ளார்.

இதனையடுத்து இரும்பாலை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, வரதராஜனை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குடும்ப உறவுகள், காதல் விவகாரங்கள், கவுரவக் கொலை போன்றவை தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Summary in English : In Salem, a 24-year-old homoeopathy student was found deceased in her rented room. Investigation revealed her father had visited her earlier. After 25 days of search, he was arrested and confessed to the incident due to disagreement over her relationship. He is now in judicial custody.