தொடர்ந்து மூன்று முறை.. ஸ்கூல் ஹாஸ்டலில் கதறிய 11-ம் வகுப்பு மாணவி.. துடிதுடித்து பிரிந்த உயிர்..
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் – மகாலட்சுமி தம்பதியின் மூத்த மகள், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் வேலை காரணமாக சென்னை கீழ்கட்டளை பகுதியில் வசித்து வந்த நிலையில், மாணவி பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். இன்று காலை சுமார் 6 மணியளவில் மாணவி தனது தாயார் மகாலட்சுமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, “அம்மா.. அம்மா..?” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு விடுதியின் பொறுப்பாளர் போன் செய்து, சுமார் 8 மணி அளவில் மாணவி தூக்கிட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். இதற்கிடையில் மீண்டும் பெற்றோருக்கு போன் செய்த விடுதி நிர்வாகம், மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்...