காரியாபட்டியின் அமைதியான கிராம வீதிகளில், ஒரு குடும்பத்தின் கதை தொடங்கியது. இளையராஜா என்ற இளைஞன், தன் மனைவி முத்துலட்சுமியுடனும், சிறிய மகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். ஆனால், வாழ்க்கையின் சூறாவளி அவர்களைத் தாக்கியது.
இளையராஜா துபாய்க்கு வேலைக்குச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமியின் வாழ்க்கையை தனிமை சூழ்ந்தது. இரண்டு குழந்தைகளுடன் இருந்த முத்துலட்சுமிக்கு வயிற்றுப்பசி தீர்ந்தாலும், உடல்பசி அதிகமாகி கொண்டே இருந்தது.

அந்த நேரத்தில், முத்துலட்சுமி வாழ்க்கையில், மணிகண்டன் என்ற இளைஞன் நுழைந்தான். கம்பாளி கிராமத்தைச் சேர்ந்த அவன், பள்ளத்துப்பட்டியில் குடியேறியிருந்தான். மெல்ல மெல்ல அவர்களுக்கிடையே தகாத உறவு மலர்ந்தது. மணிகண்டன், இந்த ரகசியத்தைப் பயன்படுத்தி முத்துலட்சுமியிடம் நகைகளையும் பணத்தையும் மிரட்டி பறித்தான். அவளால் எதிர்க்க முடியவில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து, 2016-ஆம் ஆண்டு இளையராஜா சொந்த ஊருக்கு திரும்பினான். மனைவியின் நடத்தை பற்றிய சந்தேகங்கள் அவன் மனதை அரித்தன. ஒருநாள், மணிகண்டனைத் தாக்கினான். ஆத்திரம் கொண்ட மணிகண்டன், பழிவாங்கும் எண்ணத்தில் காத்திருந்தான்.

ஒரு இரவு, தனியாக நடந்து சென்ற இளையராஜாவை மணிகண்டன் கம்பியால் தாக்கி கொலை செய்தான். இரத்தம் தோய்ந்த உடலை சரக்கு வாகனத்தில் ஏற்றி, கம்பாளி கிராமத்தின் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றான். அங்கு புல்லூர் முத்துக்கருப்பனும், செவல்பட்டி கருப்பசாமியும் உதவியுடன் ஆழமான குழியில் புதைத்தான்.
கொலையை மறைக்கும் திட்டம் தொடங்கியது. மணிகண்டன், முத்துலட்சுமியிடம் உண்மையைச் சொன்னான். "வெளியில் சொன்னால் உன்னையும் உன் மகளையும் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டினான். "கணவர் காணவில்லை என்று புகார் கொடு" என்று ஆணையிட்டான்.
முத்துலட்சுமி, பயத்தில் காரியாபட்டி காவல் நிலையத்தில் சென்று, "இளையராஜா காணவில்லை" என்று புகார் அளித்தாள். வழக்கு தொடங்கியது.

காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்ற முத்துலட்சுமி, கணவன் காணாமல் போன வழக்கு பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை. தயவு செஞ்சு கண்டுபிடிச்சு குடுங்க.. என்று கதறினார். ஆனால், அவர் கதறலில் செயற்கைத்தனம். உறவினர்களின் அழுத்தத்தின் பெயரால் மட்டுமே மீண்டும் காவல்நிலையத்துக்கு வந்துள்ளார் என்பது அவரது பேச்சு, நடவடிக்கைகள் காட்டிக்கொடுத்தன.

முத்துலட்சுமியின் கைப்பேசி அழுப்புகளை ஆய்வு செய்தபோது, ஒரு சில செல்போன் நம்பர்களுக்கு அடிக்கடி அழைப்புகள் சென்றிருப்பது உறுதியானது. யார் அந்த நம்பர் என தேடியபோது, அது மணிகண்டன் என்பது தெரியவந்தது.தகாத உறவின் ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது.
முத்துலட்சுமி உஷாரானாள். மணிகண்டனிடம், "போலீஸார் என்னை சந்தேகப்படுகிறார்கள். சடலத்தைத் தோண்டி அழித்துவிடுங்கள்" என்று கட்டளையிட்டாள்.

மணிகண்டன், காரியாபட்டி செப்ரியின் உதவியுடன் காட்டுக்குச் சென்றான். புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டினான். எலும்புகளை உடைத்து, விரகனூரில் வைகை ஆற்றில் கரைத்தான். நாய்கள் சடலத்தை இழுக்கக் கூடாது என்பதற்காக, கம்பிக்குடியைச் சேர்ந்த திருக்கல்யாணியின் யோசனையின்படி குருணை மருந்தை ஊற்றினான்.

ஆனால், ரகசியங்கள் என்றும் நீண்ட காலம் மறைந்திருக்க முடியாது. தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளியானது. 2018-ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை, மணிகண்டன், முத்துலட்சுமி உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

கம்பாளி கிராம காட்டுப்பகுதிக்கு மணிகண்டன் போலீசாருடன் சென்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டினான். அரசு மருத்துவர் தலைமையிலான குழு, அங்கிருந்து சில எலும்புத் துண்டுகளையும், சாவியையும் சேகரித்தது.
ஒரு காதல், மிரட்டல், கொலை, மறைப்பு... எல்லாமே ஒரு கிராமத்தின் அமைதியை உடைத்து, உண்மையின் வெளிச்சத்தில் வெளிப்பட்டது. காரியாபட்டியின் அந்த இருண்ட இரவுகள், இன்றும் மக்களின் நினைவில் நிழலாடுகின்றன.



