கூடவே இருந்த இரண்டு துரோகிகள்.. ஆடியோ ஆதாரத்துடன் பிடித்த விஜய்.. பவன் கல்யாண் சொன்ன அந்த வார்த்தை..

சென்னை, மார்ச் 11, 2026: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி வாய்ப்புகளை கணிப்பதில் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. மக்களிடையே நிலவும் குழப்பமான சூழல் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பலர் பகிரங்கமாக புதிய அரசியல் சக்திகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பேசினாலும், தனிப்பட்ட உரையாடல்களில் திமுக அல்லது அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கே வாக்கு செலுத்துவதாக தெரிவிப்பதால், தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாததாக உள்ளன.இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த கட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், சமீப காலமாக விஜயை சுற்றியுள்ள விவாகரத்து சர்ச்சை மற்றும் திருமணத்திற்கு வெளியே உறவு விவகாரங்கள் அவரது பொது இமேஜை பாதித்துள்ளன.

குறிப்பாக, பெண்கள் மத்தியில் அவர்மீது இருந்த ஆதரவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. "தனது குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாத ஒருவர், நாட்டை எப்படி நிர்வகிப்பார்?" என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், விஜயின் மனைவியுடனான 25 ஆண்டு கால வாழ்க்கை முடிவடைந்த நிலையில், ஒரு நடிகையுடன் திருமண விழாவில் பங்கேற்றது பழிவாங்கல் மனப்பான்மையாக பார்க்கப்படுகிறது. இது தேர்தல் களத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் கூற்றுப்படி, விஜய் தனித்துப் போட்டியிடுவது ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும். இதனால், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சொற்ப வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறலாம் என்றும், NDA கூட்டணி பெரும்பான்மை பெறும் சூழல் இருந்தாலும், திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிவதால் முடிவு கணிக்க முடியாததாக உள்ளது.

ஆளும் கட்சி சிறு அமைப்புகளை கூட கூட்டணியில் சேர்த்து, ஒவ்வொரு வாக்கையும் முக்கியமாக கருதி செயல்படுவதால், அவர்களுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது. அதேநேரம், திமுகவுக்கு எதிரான வாக்குகள் பல முனைகளில் பிரிவதால், திமுகவின் வெற்றி சாத்தியம் அதிகம் என கணிக்கப்படுகிறது.இருப்பினும், NDA கூட்டணி திமுகவை வீழ்த்தி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளது.

விஜயின் TVK கட்சியை NDAவுடன் இணைத்தால், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம் என சில NDA தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், விஜயை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. "TVK தொண்டர்கள் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர்.

NDAவுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராக 40 உறுப்பினர்களுடன் சட்டசபைக்கு செல்லுங்கள். தனித்துப் போட்டியிட்டால், கமல்ஹாசனின் கட்சி போல TVKவும் அழிக்கப்படும்" என்று பவன் கல்யாண் அறிவுறுத்தியுள்ளார்.

மறுபுறம், விஜயின் விவாகரத்து ஆவணங்கள் இணையத்தில் கசிந்ததற்கு கட்சியின் இரு நிர்வாகிகளே காரணம் என ஆடியோ ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாராம் விஜய்.

இது கட்சி உள்ளே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நெருங்கும் போது கட்சியை விட்டு வெளியேறி பெரும் பின்னடைவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் எனவும், அவர்களையும் விஜய் அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், சில மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தால் அது தவெகவின் இமேஜை சுக்கு சுக்காக உடைக்கும். இதனால், பல தொகுதிகளில் டெப்பாசிட் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும். இதற்க்கான, அனைத்து முன் ஏற்பாடுகளையும் பெரிய புள்ளி ஒருவர் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் செய்து வருகிறாராம்.

2026 தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விஜயின் முடிவு தான் மக்கள் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary : In Tamil Nadu's 2026 assembly election, opinion polls show confusion among voters. TVK, led by Vijay, faces challenges due to recent personal controversies affecting his public image, particularly among women. His independent contest may split anti-DMK votes, increasing DMK's chances of retaining power despite NDA's efforts to ally with him.