உன் பொண்டாடியை இதை பண்ணு.. உல்லாச கட்டளை போட்ட கள்ளக்காதலி.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

தூத்துக்குடி : கணவரின் கள்ளக் காதலி “உன் மனைவியை கொன்றுவிட்டால் தான் நமக்கு சந்தோஷம்” என ஆடியோவில் தூண்டியதாக புகார் அளித்த பெண்ணுக்கு, கணவர் குடும்பத்தினர் மற்றும் கள்ளக்காதலியின் குடும்பத்தினர் “வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் உன்னையும் உன் குழந்தைகளையும் கொலை செய்வோம்” என மிரட்டல் விடுத்ததாக மற்றொரு புகார்.

தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ராஜேஸ்வரி, கடலூரைச் சேர்ந்த சந்திரசேகரனை 2015-ம் ஆண்டு கும்பகோணத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர். சந்திரசேகரன் கடலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அந்த அலுவலகத்தில் பணிபுரியும் சரண்யா என்ற பெண்ணுடன் சந்திரசேகரனுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

சரண்யாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டு, அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ராஜேஸ்வரி தன் கணவரிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சந்திரசேகரன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததாகவும் ராஜேஸ்வரி கூறினார்.

இதை அவரது மாமியார் மற்றும் மன்னாரிடம் தெரிவித்தபோது, “அவன் ஆம்பளை... அப்படித்தான் இருப்பான்” எனக் கூறி ராஜேஸ்வரியை திட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சரண்யா சந்திரசேகரனிடம் “உன் பொண்டாட்டி உயிரோட இருந்தால் நம்ம சந்தோஷமா இருக்க முடியாது... நீ அவளை கொன்னுடு” என்று கூறிய ஆடியோ ராஜேஸ்வரிக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, தன் கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சந்திரசேகரன் மற்றும் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் கோபமடைந்த சந்திரசேகரனின் பெற்றோர், சரண்யா மற்றும் அவரது பெற்றோர், ராஜேஸ்வரியை அணுகி “வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் உன்னையும் உன் இரு குழந்தைகளையும் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டியதாக ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

பயந்துபோன ராஜேஸ்வரி, தன் இரு குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தார்.

மேலும், சந்திரசேகரன் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணை கடத்தி வந்து கற்பழித்ததாகவும், கைது செய்யப்படுவதற்கு முன்பு சரண்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் ராஜேஸ்வரி போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த இரண்டு புகார்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Summary in English : A woman from Thoothukudi filed a complaint against her husband and his office colleague after their extramarital relationship caused family disputes. She later reported threats from the husband's family and the colleague's family for not withdrawing the case. Police registered cases and arrested the husband. The woman also mentioned prior incidents involving the husband.