பொய்யா? திடீர் திருப்பம்! உடைந்தது மிகப்பெரிய ரகசியம்!
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்புமணுவை தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்புமணுவில் தனது மனைவி சங்கீதா பெயரில் கணிசமான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவர் பட்டியலிட்டுள்ளார். இது, சமீபத்தில் சங்கீதா விஜய்க்கு எதிராக தொடுத்த விவாகரத்து வழக்கில் அவர் கூறியுள்ள “பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டிருக்கிறேன்” என்ற குற்றச்சாட்டுக்கு நேரடி முரணாகத் தெரிகிறது.விஜய் தாக்கல் செய்த வேட்புமணு விவரங்களின்படி: சங்கீதாவின் வங்கி சேமிப்புக் கணக்குகளில் சுமார் 11 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. எச்டிஎப்சி வங்கியில் 10 கோடி ரூபாய் நிலையான வைப்பு (FD) உள்ளது. சங்கீதா பெயரில் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தில் சங்கீதா பெயரில் ஒரு குடியிருப்பு உள்ளது. சங்கீதாவுக்கு மொத்தம் 15.51 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. மேலும், நகைகள் விவரத்தில்: 134 கேரட் வைரங்கள் – மதிப்பு 1 கோடி ரூபாய் 3 க...