காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியாக உள்ள கே.ஏ. செங்கோட்டையன் கடுமையான கருத்து தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசியபோது, "கூட்டணி வைக்கவில்லை என்பது இங்கே பிரச்சனை இல்லை.

ஆனால், அவர்கள் எங்களை (தவெகவை) காரணம் காட்டித்தான் திமுகவில் அதிக இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். எங்களால் அவர்கள் பலன் அடைந்திருக்கிறார்கள்" என்று கூறினார்.
மேலும், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் முன்பு கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தற்போது, தினகரன் NDA கூட்டணியில் இணைந்துவிட்டார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்டார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன..? என்ற கேள்விக்கு,
இதை எதிர்பார்க்கவில்லை. திமுகவில் இணைந்தது எதிர்பார்க்காத ஒன்று.. வேதனையாக உள்ளது என்று தெரிவித்தார்.
இது தமிழக அரசியலில் தற்போது நிலவும் பிளவுகள் மற்றும் கூட்டணி மாற்றங்களுக்கு மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்க்கிறது.
செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தவெகவில் இணைந்த நிலையில், ஓபிஎஸ்-இன் முடிவை எதிர்பாராததாகவும், கடுமையாக கண்டிப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது எதிர்கால கூட்டணி விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
Summary : Former AIADMK minister K.A. Sengottaiyan, now with Tamilaga Vettri Kazhagam, criticized Congress for gaining more seats in alliance with DMK by citing AIADMK's influence. He strongly disapproved of O. Panneerselvam's decision to join DMK, calling it unexpected, while noting TTV Dhinakaran has already aligned with another front.

