பகலில் ஆசிரியை.. இரவில் வேறு மாதிரி.. குவியல் குவியலாக ஆணுறை.. கர்ப்பத்திற்கு காரணம் தெரிந்து மிரண்ட போலீஸ்!

ரியா சென், கொல்கத்தாவில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 31 வயதானாலும், அழகும் இளமைத் தோற்றமும் கொண்டவர். திருமணமாகாத அவர், மாலை நேரங்களில் வீட்டுக்கு அருகிலுள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து கூடுதல் வருமானம் ஈட்டினார்.

அந்த டியூஷன் வகுப்பில் படித்து வந்தான் ஆர்யன் மலிக் – இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன், வயது 18. நட்பு தொடங்கியது, விரைவில் காதலாக மாறியது. 

32 வயதுக்கு மேல் திருமண வரன் அமையாத ரியாவுக்கு, இந்த இளைஞனின் அன்பு பெரும் ஈர்ப்பாக இருந்தது. ஆர்யனும் அவளை மனைவியாக்க விரும்பினான். ஆனால் சட்டம் தடையாக இருந்தது – 21 வயதுக்கு கீழ் ஆண் திருமணம் செய்ய முடியாது.

இருவரும் சேர்ந்து ஒரு கொடூரத் திட்டம் தீட்டினர். ரியா, ஆர்யனின் பெற்றோரிடம் சென்று, “உங்கள் மகன் என்னை கற்பழித்து விட்டான். தூக்க மாத்திரை கொடுத்து செய்தான். 

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறேன்” என்று மிரட்டுவது. பயந்த பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என்று நம்பினர்.

திட்டப்படி, ரியா ஆர்யனின் வீட்டுக்கு சென்று கண்ணீருடன் கதை சொன்னாள். “உங்கள் மகன் என்னை கெடுத்து விட்டான். நான் இப்போ கர்ப்பமாக இருக்கிறேன். திருமணம் செய்து வையுங்கள், இல்லையென்றால் போலீஸ்” என்று அழுதாள். ஆர்யன் அழுதபடி “தெரியாமல் நடந்தது” என்று நடித்தான்.

பயந்த மலிக் தம்பதியர், குடும்பப் பெருமை போய்விடும் என்று அஞ்சி, திருமணத்திற்கு சம்மதித்தனர். ரியாவின் 20 வயது பெண் போன்ற இளமைத் தோற்றம் காரணமாக வயது வித்தியாசம் வெளியில் தெரியாது என்றும் நினைத்தனர்.

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ரியா மூன்று மாத கர்ப்பம் என்று சொன்னாள். அதிர்ச்சியடைந்தான் ஆர்யன். என்ன சொல்ற ரியா, நான் கற்பழிச்சேன், கர்ப்பமா இருக்கேன் என பொய் தானே சொன்னோம். நீ என்ன இப்போ உண்மையாவே கர்ப்பமா இருக்கேன்ன்னு சொல்லுற..? வாக்குவாதம் மூண்டது.

பெற்றோர்களை சந்தித்தான் ஆர்யன், உண்மையை ஒப்புக்கொண்டான். எனக்கு ரியா டீச்சரை பிடிச்சிருக்கு,“நாங்கள் காதலிக்கிறோம். ஆனால் உடலுறவு ஏதும் நடக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் என்று நான் சொன்னேன். இந்த கற்பழிப்பு நாடகம் உங்களை சம்மதிக்க வைக்கத்தான். ஆனால் கர்ப்பம் நிஜம் – ஆனால் நான் காரணம் இல்லை!” என்று பெற்றோரிடம் சொன்னான்.

கோபமடைந்த பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

ரியா, தன்னுடன் அதே பள்ளியில் பணியாற்றிய 38 வயது விக்ரம் ராயுடன் கள்ளத் தொடர்பில் இருந்திருந்தாள். விக்ரம் ஏற்கனவே திருமணமானவர் – இரு குழந்தைகளுக்கு தந்தை. தனது திருமணம், குழந்தைகள் இருப்பதை மறைத்து ரியாவுடன் உறவு வைத்திருந்தான். 

பள்ளி வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த பழைய ஸ்டோர் ரூம் இருவருக்கும் சொர்க்கமானது. ஸ்டோர் ரூம் வெளியே குவியல் குவியலாக பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டெடுக்கப்பட்டன. 

பள்ளி நேரத்தில் ரியாவும், விக்ரமும் தங்களுடைய உடல்களை இணைத்து உல்லாச உலகில் மிதந்தனர். எப்போதும் ஆணுறை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சில நாட்கள் அஜாக்கிரதை. இதனால், ரியா கர்ப்பமானால், பின்னர் விக்ரம் பற்றிய உண்மை தெரிந்ததும் ரியா விலகினாள்.

அதன் பிறகுதான் ஆர்யனை காதலிப்பது போல் நடித்து, அவனை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டாள். ஆர்யன் அடிக்கடி அவளது அழகை புகழ்ந்து, “உங்களைப் போன்றவரே என் மனைவியாக வேண்டும்” என்று சொன்னதை பயன்படுத்தி, அவனை ஆசைப்பட வைத்தாள்.

காதலிக்க தொடங்கியதும், பலமுறை ஆர்யானுடன் உடலுறவுக்கு முயன்றாள் – “அப்போது கர்ப்பத்துக்கு காரணம் நான் தான் என்று ஒப்புக்கொள்வான்” என்று திட்டமிட்டாள்.

ஆனால் ஆர்யன் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டான். “திருமணத்திற்குப் பிறகு” என்று மறுத்து வந்தான். அவன் எல்லை மீறியிருந்தால், விக்ரமின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

போலீஸ் விசாரணையில் ரியா கைது செய்யப்பட்டாள். விக்ரம் ராயும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். ஆர்யனின் ஒழுக்கமே அவனை காப்பாற்றியது.

மனைவி, குழந்தைகள் இருந்தும் ஒழுக்கம் இல்லாமல் ரியாவுடன் உறவில் இருந்த விக்ரம் இப்போது சிக்கலில் சிக்கினான்.

இந்த சம்பவம் ஒரு பெரிய பாடத்தை கற்பிக்கிறது – எவ்வளவு காதல் இருந்தாலும், ஒழுக்கம் தான் இறுதியில் உயிர்காக்கும் கேடயம். கொல்கத்தாவின் இந்த வழக்கு, நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு விசித்திரமான, அதிர்ச்சி தரும் கதை.

இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டோரின் வலி கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Summary : A 31-year-old unmarried tuition teacher in Kolkata developed a relationship with her 18-year-old student. To overcome the legal marriage age barrier, they planned a false complaint to pressure his parents into agreeing. Later revelations showed the pregnancy was not related to the student, leading to police involvement and exposure of her prior relationship with a married colleague.