தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது: இன்றைக்கு தமிழகத்தில் நடக்கக்கூடிய மக்கள் பிரச்சனை சார்ந்த எந்த ஒரு பிரச்சனை மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எந்தக் கட்சியும் குரல் கொடுப்பதில்லை.

இவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு கூட இங்கிருந்து கண்டனங்களை பதிவு செய்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு வாய் திறப்பதில்லை. காரணம், அவர்களுடைய எஜமானர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கோபம் வரும் என்பதால்தான்.
மேலும், "இந்தக் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நடக்கும் எந்த அநியாயத்திற்கும் குரல் கொடுக்காமல், மக்களிடமிருந்து மிகவும் தொலைவில் சென்றுவிட்டன. இதன் பலனை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு கொடுப்பார்கள்" என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, NDA கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கு ஜனசேனா கட்சித் தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தவெக தலைவர் விஜய் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன என்று குறிப்பிடப்பட்டது.
இது குறித்து கருத்து கேட்டபோது, ஆதவ் அர்ஜுனா "வதந்திகளுக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை" என்று கடந்து சென்றார்.
இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : TVK's Athav Arjuna criticized that parties like VCK, Congress, and Communists do not raise voice on Tamil Nadu's local public issues. They comment on problems elsewhere but remain silent here to avoid displeasing Chief Minister Stalin. He said people will respond in 2026 elections.

