“அவங்க தான் என் WIFE." சிக்கினார் சின்னத்திரை நடிகை! ஆதாரத்துடன் உதவி இயக்குனர் பரபரப்பு புகார்!

சென்னை: சின்னத்திரை நடிகையின் கணவரும், உதவி இயக்குநருமான ஆதி தனது மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது மனைவி ஒரு பிரபல சின்னத்திரை நடிகை என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நான் அவரை அறியாதவள், அவர் பொய் சொல்கிறார்” என்று மனைவி பொதுவெளியில் கூறியதால் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதி தெரிவித்தார்.

ஆதி தனது மனைவியுடன் மூன்று ஆண்டுகள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார். “ஒரு ஷூட்டிங் மூலமாக சென்னையில் எங்களது காதல் தொடங்கியது. பின்னர் வேப்பேரி பெரியார் பகுதியில் உள்ள ரெஜிஸ்டார் அலுவலகத்தில் நாங்கள் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டோம்” என்றார்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட சின்னஞ்சிறு சண்டைகளை காரணமாகக் காட்டி மனைவி வெளியேறியதாகவும், அதன் பின்னர் அவர் தன்னைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பியதாகவும் ஆதி குற்றம் சாட்டினார்.

“சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் என்னைப் பற்றி ‘எனக்கு அவர் யாரென்றே தெரியாது, அவர் பொய் சொல்கிறார்’ என்று கூறினார். அதன் பிறகு எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸிலும் முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள் இருந்தன” என்று ஆதி விளக்கினார்.

இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், “ஒரு நாள் அவர் திரும்பி வந்துவிடுவார்” என்ற நம்பிக்கையில் இதுவரை அமைதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் கோவா, பெங்களூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் அவரது மனைவியின் செயல்பாடுகள் குறித்த உண்மைகள் வெளியானதாகக் கூறினார்.

“அவர்களால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் என்னிடம் வந்து எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். அந்தப் பெண் இப்போதுதான் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறார். இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றார்.

ஆதியின் தொழில்முறை வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. “நான் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். இரண்டு மூன்று நிறுவனங்களுக்கு ஸ்டோரி சொல்லச் சென்றபோது அவர்கள் எனது பின்னணியை சரிபார்க்கின்றனர். அப்போது என் மனைவி போட்ட அந்த இன்டர்வியூ வீடியோ மட்டுமே வருகிறது.

‘இவர் யாருக்கும் தெரியாதவர், இவர் மீது கம்ப்ளைன்ட் இருக்கு’ என்று பொய்யான தகவல்கள் பரவுகின்றன. இதனால் எனது ப்ரொபஷனல் லைஃப் மற்றும் பிசினஸ் லைஃப் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. நண்பர்கள் வீட்டு விழாவுக்குச் சென்றாலும் அங்கும் இதே பிரச்னை எழுகிறது” என்று மனம் திறந்தார்.

இந்த விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆதி உறுதியாகக் கூறினார். “எங்களுக்குள் நடந்தது சாதாரண கணவன்-மனைவி சண்டைதான். என் மீது உண்மையிலேயே ஏதாவது தவறு இருந்தால், அவர் இதுவரை எந்த மீடியாவிலும் அல்லது இன்டர்வியூவிலும் நேரடியாக என்னை எதிர்கொண்டு பேசவில்லை. நான்தான் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தேன்” என்றார்.

மனைவியை பலமுறை தொடர்பு கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆதி சொன்னார். “என்னிடம் இரண்டு மூன்று எண்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் புதிய எண்ணை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றேன். ஆனால் அவர் பக்கம் இருந்து ‘ஒரு நாள் வெயிட் பண்ணுவோம்’ என்ற பதில்தான் வருகிறது. இப்போது உண்மை எனக்கு ஒவ்வொன்றாகத் தெரிய வருகிறது. தப்பு முழுக்க அவர்கள் பக்கம்தான் இருக்கிறது” என்று வேதனை தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை சட்டரீதியாக கையாளப் போவதாக ஆதி அறிவித்தார். “எல்லா ஆதாரங்களையும் நான் கோர்ட்டில் சமர்ப்பிக்கப் போகிறேன். அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விவகாரம் உட்பட அனைத்தையும் சட்டப்படி நிரூபிப்பேன். இப்போது வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் இது என் மனைவியையும், அந்தப் பெண்ணையும் பாதிக்கும். ஆனால் நீதிமன்றத்தில் உண்மை வெளியாகும்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

இந்தச் செய்தி தற்போது சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதியின் மனைவி இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. விவகாரம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : Assistant Director Adi has shared that his wife, a television actress, publicly denied knowing him and filed a divorce notice with false claims. He stated their marriage followed three years of love, starting from a film shoot in Chennai. Adi mentioned his personal and professional life have been affected due to the situation. He added that he learned of another woman's difficulties linked to his wife and plans to address all issues legally in court.