வேண்டாம் விடு.. கதறிய மாமியார்.. விடாமல் மருமகன் செய்த அசிங்கம்.. விசாரணையில் வெளியான வினோதம்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த 41 வயது அஜ்மத் உசேன் என்பவர், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமல் தடுத்ததாகக் கூறி, மாமியார் ஆசியம்மாள் (48) என்பவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மத் உசேன் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தஸ்லீமா தனது இரு குழந்தைகளுடன் அமராவதியில் உள்ள தாய் ஆசியம்மாளின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். மேலும், அஜ்மத் உசேனை விவாகரத்து செய்யவும் முயற்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அஜ்மத் உசேன் தனது மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்லும் நோக்கில் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தஸ்லீமா வீட்டில் இல்லை. மாமியார் ஆசியம்மாள் மட்டும் இருந்தார். மனைவியையும் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அஜ்மத் உசேன் கேட்டபோது, ஆசியம்மாள் ...