“53 கிலோ எப்படி வந்துச்சு?” நியாயவிலை கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு நியாய விலைக்கடையில் அரிசி விநியோகத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

NewsTamil 24x7 தொலைக்காட்சியின் செய்தியாளர் நேரில் சென்று கடைப் பொறுப்பாளரிடம் தட்டிக் கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவில், செய்தியாளர் கடையில் உள்ள அரிசி மூட்டைகளின் எடை, பில் வழங்கல் மற்றும் உண்மையான விநியோகம் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு சிலருக்கு நியாயவிலைக்கடையில் இருந்து அதிக எடை அளவில் அரிசி வழங்கபபடுகிறது. ஒரே ஒரு நபருக்கு கொடுப்பதற்க்காக 300 கிலோ அரிசி மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது, யாருக்கான அரிசியை எடுத்து நீங்கள் இப்படி செய்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார் செய்தியாளர்.

செய்தியாளர் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியபோது, கடைப் பொறுப்பாளர் முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர் “நான் எடுத்தது உண்மைதான்... ஆனால் அவர் கார்டுக்கு தான் கொடுத்தேன்” என்று ஒப்புக்கொண்டார். “இந்தத் தடவை 300 கிலோ அரிசி வெளியே போனது” என்றும், “போன மாதம் வாங்காமல் இருந்ததால் இந்த முறை அதிகமாக கொடுத்தோம்” என்றும் நியாயப்படுத்த முயன்றார்.

செய்தியாளர் கேள்வி:

“மக்களுக்கான அரிசி யாருக்கு அனுப்பப்படுகிறது? மீதி இருக்கும் அரிசி யாருக்கு? பப்ளிக் எல்லாம் வாங்கிக்கொண்டால் மீதி யாருக்கு?”

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

NewsTamil 24x7 செய்தியாளர் முடிவில், “மக்கள் கேட்க வேண்டும். இது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Summary in English : In Salem district, a fair price shop saw questions over rice distribution. A NewsTamil 24x7 reporter visited the outlet and discussed weight measurements, billing process, and quantities issued to ration card holders. The shop staff explained the procedures and responded to the queries raised during the visit.