மயிலாடுதுறை அருகே கண்டம்பத்தூர் பெரிய தெருவைச் சேர்ந்த 28 வயதான ஆனந்தராஜ் என்பவர், 56 வயதான பவானி என்பவரை மது போதையில் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடக் கூலி வேலை செய்து வந்த ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பவானியுடன் நீண்டகாலமாகப் பழக்கம் வைத்திருந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போன்று 9 ஆண்டுகளுக்கும் மேலாக தனி வீட்டில் வாழ்ந்து வந்தனர். திருப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வேலை செய்து பணம் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே ஒரு மோசமான பழக்கம் இருந்தது. அடிக்கடி இருவரும் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருப்பது வழக்கம். மது அருந்தும் போது பவானி, “நீ என்னை விட்டுப் போய்விடுவாய், வேறு இளம் பெண்ணைத் தேடிக் கொள்வாய்” என்று அடிக்கடி சந்தேகம் வெளியிட்டு வந்ததாகத் தெரிகிறது. அப்போது ஆனந்தராஜ், “நான் உன்னை எப்போதும் விட்டுப் போக மாட்டேன்” என்று சமாதானப்படுத்துவார்.
சம்பவத்தன்று மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் இதே பிரச்சினை வெடித்தது. “நீ என்னை விட்டு எங்கும் போகக்கூடாது” என்று தன்னுடைய விபரீத ஆசையை வெளிப்படுத்திய பவானி அதற்கு வற்புறுத்தியதாகவும், ஆனந்தராஜ் “நான் எங்கும் போக மாட்டேன்” என்று கூறியும், பவானி மீண்டும் “நீ என்னை விட்டுப் போகத்தான் போகிறாய்” என்று பிடிவாதமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், மது போதையில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பவானியை கடுமையாகத் தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பவானி ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அப்போதும் விடாத ஆனந்தராஜ் கடுமையாக தாக்கியுள்ளார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பவானி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆனந்தராஜ், செய்வது அறியாது உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்துக்குச் சென்று தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ஆனந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Summary in English : In Mayiladuthurai, 28-year-old Anandaraj and 56-year-old Bhavani lived together as a couple for nine years without marriage. Both worked as labourers in different places. They frequently consumed alcohol. During one such occasion an argument occurred and Bhavani passed away at the spot. Anandaraj later went to the police station and surrendered.