“முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இதை செய்யக்கூடாது” மருத்துவர் கூறிய ரகசியம்!

சென்னை : திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமணத் தம்பதிகளிடையே முதல் இரவில் ஏற்படும் உறவு சம்பந்தமான பிரச்சனைகள் பல குடும்பங்களில் மன அழுத்தத்தையும் பிரிவையும் ஏற்படுத்துவதாக மருத்துவர் கீர்த்தனா வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவுரையில், “முதல் முறை உடல் உறவு கொள்ளும் போது தொடுதல், பேச்சு மற்றும் முன் விளையாட்டுகளுடன் நிறுத்திக் கொள்வது பெண்ணுக்கு ஆண் மீது அதீத நம்பிக்கையையும் அன்பையும் உருவாக்கும்” என்று கூறியுள்ளார்.

பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், பல இளைஞர்கள் முதல் இரவிலேயே அனைத்தையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகவும், தன்னுடைய ஆண்மையை அவளிடம் நிருபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் பெண்கள் தங்கள் கணவன் மீது இயற்கையான ஈர்ப்பு குறைந்து, “இவனுடன் எப்படி வாழப் போகிறோம்?” என்ற அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர் என்றார்.

ஒருவேளை “உறவு கொள்ளும் நிலைக்கு செல்லும் போது, அதற்கு அந்த பெண்ணும் ஒப்புக்கொள்ளும் போது அவளின் உடல் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, மிகவும் மென்மையான முறையில் செயல்பட வேண்டும். ‘காய்ந்த மாடு கம்பில் புகுந்தது’ போன்ற வலியை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

பல தவறான வழிகாட்டுதல் காரணமாக இளைஞர்கள் மோசமாக நடந்துகொள்கின்றனர். ஆனால், குணத்தில் அவர்கள் மிகவும் சாதுவாக, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களாக, மற்றவர்களை மதிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், முதலிரவில் மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை கெடுத்துக்கொள்கின்றனர்.

என்னிடம் ஆலோசனைக்கு வந்த பல தம்பதியினருக்கு அவர்களின் முதலிரவில் இருந்தே பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. அங்கிருந்தே அவர்களுக்குள் விரிசல் தொடங்கியுள்ளது என்பதை அனுபவ ரீதியில் பார்த்துள்ளேன். 

மருத்துவர் கீர்த்தனா வெங்கடேஷ் மேலும் கூறியதாவது: “முதல் நாள் தொடுதல், பேச்சு மற்றும் முன் விளையாட்டு வரை மட்டும் நிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உறவை முழுமையாக்கிக் கொள்ளலாம்.

இந்த அணுகுமுறை பெண்ணுக்கு பாதுகாப்பான உணர்வையும், கணவன் மீதான ஆழமான பாசத்தையும் உருவாக்கும். இதன் மூலம் தம்பதிகளிடையே நீண்டகால நல்லிணக்கம் ஏற்படும்” என்றார்.

இந்த அறிவுரை, இளம் தம்பதிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பொறுமை, புரிதல் மற்றும் மென்மை ஆகியவை மிக முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது.

மனைவி-கணவன் உறவில் உடல் ரீதியான திருப்திக்கு முன், மன ரீதியான நம்பிக்கை அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதே மருத்துவரின் முக்கியச் செய்தியாகும்.

English Summary : Doctors advise newlywed couples to begin their physical relationship gradually. On the first night, focus on gentle touch, conversation, and closeness without rushing. This approach helps build strong trust and emotional bonding. Understanding each other’s comfort leads to a healthier and more harmonious married life over time.