“முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இதை செய்யக்கூடாது” மருத்துவர் கூறிய ரகசியம்!
சென்னை : திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமணத் தம்பதிகளிடையே முதல் இரவில் ஏற்படும் உறவு சம்பந்தமான பிரச்சனைகள் பல குடும்பங்களில் மன அழுத்தத்தையும் பிரிவையும் ஏற்படுத்துவதாக மருத்துவர் கீர்த்தனா வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவுரையில், “முதல் முறை உடல் உறவு கொள்ளும் போது தொடுதல், பேச்சு மற்றும் முன் விளையாட்டுகளுடன் நிறுத்திக் கொள்வது பெண்ணுக்கு ஆண் மீது அதீத நம்பிக்கையையும் அன்பையும் உருவாக்கும்” என்று கூறியுள்ளார். பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், பல இளைஞர்கள் முதல் இரவிலேயே அனைத்தையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகவும், தன்னுடைய ஆண்மையை அவளிடம் நிருபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் பெண்கள் தங்கள் கணவன் மீது இயற்கையான ஈர்ப்பு குறைந்து, “இவனுடன் எப்படி வாழப் போகிறோம்?” என்ற அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர் என்றார். ஒருவேளை “உறவு கொள்ளும் நிலைக்கு செல்லும் போது, அதற்கு அந்த பெண்ணும் ஒப்புக்கொள்ளும் போது அவளின் உடல் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, மிகவும் மென்மையான முறையில் செயல...