“மாட்டுக்கறி திம்பேன்” என அடிக்கடி கூவும் பாடகன் வேடன் செய்த தில்லாலங்கடி.. சுத்து போட்டு கைது செய்த கேரளா போலீஸ்!

கேரளா : ராப் பாடகன் என சொல்லிக்கொள்ளும் இந்த வேடன், சிறுத்தைப்பல் மாலை அணிந்த விவகாரத்தில் கேரள வனத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய இவன் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

சாதி மத நிற வேறுபாடுகளுக்கு எதிரானவன் என தன்னை பெரிதாக காட்டிக்கொண்ட இவன், “சுள்ளிக்காட்டில் ஒரு முள்ளிச் செடி, காட்டு மரங்கள், காகித பூக்கள்” என சீரிய வரிகளை கோர்த்து ராப் பாடல் பாடியவன். 

ஆனால் இவன் உண்மையில் ஒரு பாலியல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்த கேவலமான பிறவி.

இவன் செய்த கேடு:

ரசிகன் ஒருவன் அன்பளிப்பாக கொடுத்ததாக சொல்லும் சிறுத்தைப்பல் செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு இது ஒரிஜினல் புலிப்பல் என பெருமை பொங்க ஊளையிட்ட இவனை வனத்துறை பிடித்து விசாரித்தது.

“இது உண்மையான சிறுத்தைப்பல் தானா என தெரியவில்லை” உண்மையில்லை என்றால் ஊடகத்தில் இவன் பொய் சொல்ல முயன்றானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால், கொல்கத்தா மத்திய தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், இவன் அணிந்திருந்தது 100% உண்மையான சிறுத்தைப்பல் என உறுதியாகி விட்டது.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கின் உடல் பாகத்தை வைத்திருந்த இந்த வேடன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவனின் பின்னணி:

முன்பே ஒரு பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் சிக்கி கைதாகி ஜாமினில் வந்த இவன், “மாட்டுக்கறி தான் என் உயிர், எப்போதும் மாட்டுக்கறிதான் தின்பேன்” என பெருமை பொங்க பேசி ஊடகங்களில் ஓலமிட்டவன்.

இங்கே தமிழர்கள் மாட்டுக்கறி உண்பது பற்றி அகநானூறு பாடலிலேயே இடம் பெற்றுள்ளது என்று ஒரு பாடலை மார்தட்டிக்கொண்டு வருவார்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள். அந்த பாடலை வரிகளை பார்ப்போமா..? 

அகநானூறு 129 (குடவாயில் கீரத்தனார்): 

“கலங்கு முனைச் சீறூர் கைதலை வைப்பக் கொழுப்பு ஆ தின்ற கூர்ம்படை மழவர்” என்பது தான் அந்த வரிகள்.

→ கலங்கு என்றால் கலங்குதல்

→ சீறூர் என்றால் சீரான பழக்கம் கொண்ட ஊர்

→ மழவர் என்றால் பாலை நில வீரர்கள் 

→ ஆ என்றால் பசு மாடு 

→ கொழுப்பு ஆ என்றால் கொழுப்பு நிறைந்த மாடு

அதாவது, சீரான ஊரைச்சேர்ந்தவர்கள் தலையில் கை வைத்துக்கொண்டு கலங்கி நிற்க கொழுப்பு நிறைந்த மாட்டை பாலை நில வீரர்கள் தின்றனர்.

எனில் மாட்டை தின்பது பாவத்திற்குரிய செயல் என அகநானூறு வரையறை செய்கிறது. ஆனால், இன்று இதனை புரட்சி என பேசி திரியும் கூட்டம் ஒன்று உறுவாகி அதை அரசியல் ரீதியாக குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்க்க பயன்படுத்தி மக்களை குழப்பிக்கொண்டிருகின்றது. அதில், இந்த வேடனும் ஒரு அங்கம். 

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டு தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயலுகிறான். எவ்வளவு புகழ் பெற்றவனாக இருந்தாலும் சட்டம் இவன் மாதிரியான கேடு கெட்ட பிறவிகளை விடாது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். வனத்துறை இவன் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது.

இவன் ரசிகர்கள் இப்போது என்ன சொல்வார்களோ? இந்த கேவலமான செயல் இவனின் உண்மையான முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

Summary : Rapper Vedan has been arrested by the Kerala Forest Department for wearing a chain with leopard teeth. The item was sent for forensic testing in Kolkata, where it was confirmed to be genuine. Vedan stated it was received as a gift from a fan and claimed he was unaware of its authenticity. Officials are preparing to file charges under wildlife protection laws.