“மாட்டுக்கறி திம்பேன்” என அடிக்கடி கூவும் பாடகன் வேடன் செய்த தில்லாலங்கடி.. சுத்து போட்டு கைது செய்த கேரளா போலீஸ்!
கேரளா : ராப் பாடகன் என சொல்லிக்கொள்ளும் இந்த வேடன், சிறுத்தைப்பல் மாலை அணிந்த விவகாரத்தில் கேரள வனத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய இவன் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சாதி மத நிற வேறுபாடுகளுக்கு எதிரானவன் என தன்னை பெரிதாக காட்டிக்கொண்ட இவன், “சுள்ளிக்காட்டில் ஒரு முள்ளிச் செடி, காட்டு மரங்கள், காகித பூக்கள்” என சீரிய வரிகளை கோர்த்து ராப் பாடல் பாடியவன். ஆனால் இவன் உண்மையில் ஒரு பாலியல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்த கேவலமான பிறவி. இவன் செய்த கேடு: ரசிகன் ஒருவன் அன்பளிப்பாக கொடுத்ததாக சொல்லும் சிறுத்தைப்பல் செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு இது ஒரிஜினல் புலிப்பல் என பெருமை பொங்க ஊளையிட்ட இவனை வனத்துறை பிடித்து விசாரித்தது. “இது உண்மையான சிறுத்தைப்பல் தானா என தெரியவில்லை” உண்மையில்லை என்றால் ஊடகத்தில் இவன் பொய் சொல்ல முயன்றானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கொல்கத்தா மத்திய தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், இவன் அணிந்திருந்தது 100% உண்மையான சிறுத்தைப்பல் என உறுதியாகி விட்டது. ...