Posts

Showing posts with the label rapper

பன்றிக்கறி கடை வைக்கும் வேடன்? செய்தி பரவியதும் பல்டி அடித்து சொன்னதை பாருங்க!

Image
சவுதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் உணவகத்தைத் தொடங்கப் போவதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை, மலையாள ராப் பாடகர் வேடன் முற்றிலும் மறுத்துள்ளார். இது உண்மைக்குப் புறம்பானது என்றும், அத்தகைய எந்த அறிக்கையையும் தான் வெளியிட்டதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வேடன் வெளியிட்ட அறிக்கையில், “சவுதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு உணவகத்தைத் தொடங்கப் போவதாகவும், அது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் பரவி வருகின்றன. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நான் வெளியிட்டதில்லை. சவுதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிலோ ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் சவுதி அரேபியாவுக்குச் செல்வது நிகழ்ச்சிக் கலைஞராகத்தான் என்றும், அங்குள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரிலேயே இது நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாட்டின் சட்டங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைத் தான் எப்போ...

“மாட்டுக்கறி திம்பேன்” என அடிக்கடி கூவும் பாடகன் வேடன் செய்த தில்லாலங்கடி.. சுத்து போட்டு கைது செய்த கேரளா போலீஸ்!

Image
கேரளா : ராப் பாடகன் என சொல்லிக்கொள்ளும் இந்த வேடன், சிறுத்தைப்பல் மாலை அணிந்த விவகாரத்தில் கேரள வனத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய இவன் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சாதி மத நிற வேறுபாடுகளுக்கு எதிரானவன் என தன்னை பெரிதாக காட்டிக்கொண்ட இவன், “சுள்ளிக்காட்டில் ஒரு முள்ளிச் செடி, காட்டு மரங்கள், காகித பூக்கள்” என சீரிய வரிகளை கோர்த்து ராப் பாடல் பாடியவன்.  ஆனால் இவன் உண்மையில் ஒரு பாலியல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்த கேவலமான பிறவி. இவன் செய்த கேடு: ரசிகன் ஒருவன் அன்பளிப்பாக கொடுத்ததாக சொல்லும் சிறுத்தைப்பல் செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு இது ஒரிஜினல் புலிப்பல் என பெருமை பொங்க ஊளையிட்ட இவனை வனத்துறை பிடித்து விசாரித்தது. “இது உண்மையான சிறுத்தைப்பல் தானா என தெரியவில்லை” உண்மையில்லை என்றால் ஊடகத்தில் இவன் பொய் சொல்ல முயன்றானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கொல்கத்தா மத்திய தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், இவன் அணிந்திருந்தது 100% உண்மையான சிறுத்தைப்பல் என உறுதியாகி விட்டது. ...