நடுத்தெருவுல நிக்கப்போறாங்க! உச்சகட்ட கோபத்தில் பேசிய நபர்!

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த மூதாட்டியான ரகு என்பவர் நியூஸ் தமிழ் 24x7 சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக அரசின் நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், மக்களை ஏமாற்றி வாக்கு கேட்டவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பேட்டியில் ரகு அவர்கள் கூறியதாவது:

“தீய சக்தி, தீய சக்தின்னு சொன்னீங்களே... இவங்க இவ்வளவு நல்ல திட்டங்கள்ல இவ்வளவு பலன்களை வாங்கிட்டு, ஸ்டாலினை ஏமாத்துனீங்களே! முதுகுல குத்துறீங்களே... இது உங்களுக்கு மனசாட்சி இருக்குதா?” என்று கேள்வி எழுப்பினார்.

மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய அவர், “மக்கள் நலத் திட்டங்கள் ஸ்டாலின் சார் தமிழக முதல்வராக எவ்வளவோ கொண்டு வந்தார். அத்தனையும் நிறுத்தப் போறாங்க.

பெண்களுக்கு இலவச பஸ் விட்டார் – ஸ்டாப். குழந்தைகளுக்கு பள்ளி சத்துணவு, காலை உணவு திட்டம்... ஒன்றா இரண்டா? அன்பில் மகேஷ் பொய்யாமணி கல்வி அமைச்சராக எல்லா பிள்ளைகளும் படிக்க வரணும்னு ஊக்கப்படுத்தி என்னவெல்லாம் கொடுத்தாரு... அத்தனையும் வாங்கிட்டு முதுகில் குத்துறீங்களே! உங்களுக்கு மனசாட்சி இருக்கா?” என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார்.

“விசில்” சத்தம் மட்டுமே கேட்கும் – நன்மை வராது!

“யாரோ விசில் அடிக்கிற நம்பிக்கையில் அந்த விசிலுக்கு ஓட்டு போட்டீங்களே... அதே விசில் சத்தம் தான் எல்லா இடத்திலும் கேட்கப் போகுது. ஆனா மக்களுக்கு செய்யற நன்மை எதுவும் வரப் போறதில்ல. இருக்கிற செஞ்ச நன்மை எல்லாம் புடுங்கிடப் போறாங்க” என்று எச்சரித்தார்.

மும்மொழிக் கொள்கை, தமிழக மக்களின் எதிர்காலம் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். “மும்மொழி கொள்கை வரப்போகுது. எதுவுமே தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் எல்லாத்தையும் அழிச்சிட்டா என்ன வரப்போகுது? நடுத்தெருவில் நிக்கப் போறாங்க தமிழக மக்கள்” என்றார்.

மத்திய அரசு தலையீடு மற்றும் அமித் ஷா கருத்து

அவர் மேலும் கூறியதாவது: “ஆறு மாதம், மூன்று மாதம் முன்னாலே அமித் ஷா சொன்னாரு – ‘நான் திமுகவை கண்டினியூ பண்ண விடமாட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிச்சிடப் போறேன்’னு. 

இதான் ஆரம்பம்... அழிவின் ஆரம்பம். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் – இது வேத வாக்கு. இன்னைக்கு ஜெயிச்சிருக்கலாம், ஆனா மத்திய அரசுல இருக்கறவங்க இவனை வச்சு ஆட்டம் ஆட... அவங்க கையாலயே அவனுக்கு அழிவு வரப் போகுது. அதுதான் நிஜம்.”

தேர்தல் நடைமுறை விமர்சனம்

வெளியூர் அதிகாரிகள் நியமனம், திறமையான உள்ளூர் அதிகாரிகளை ஒதுக்கியது உள்ளிட்டவற்றையும் அவர் சுட்டிக் காட்டினார். “பொதுமக்களை ஏமாத்தி... வெளியூர்ல இருந்து போனா நீங்க எலக்ஷன் சூப்பர்வைசர் நியமிக்கணும்.

இங்க இருக்கறவங்களுக்கு இது இல்லையா? திறமசாலிங்க இல்லையா? அவங்கல்லாம் மரமண்டையா? நார்த் இந்தியால இருக்கறவங்கல்லாம் புத்திசாலிகளா?” என்று கேள்வி எழுப்பினார்.

இறுதியில், “என் பெயர் ரகு. யார் வேணாலும் ஜெயிக்கட்டும் – நியாயமா ஜெயிச்சா ஹட்ஸ் ஆப் சொல்லலாம். ஆனா இந்த கோல்மால் பண்றது, பப்ளிக்கை ஏமாத்துறது... இது நியாயமா?” என்று கேட்டு பேட்டியை நிறைவு செய்தார்.

இந்த பேட்டி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் இதைப் பகிர்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியினரும் இதற்கு தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் நலத்திட்டங்கள், மக்கள் உணர்வுகள், மற்றும் எதிர்கால ஆட்சி மாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

English Summary : A senior DMK supporter named Raghu gave an interview to News Tamil 24x7 after the party lost power. He spoke about welfare schemes such as free bus travel for women, school meals and breakfast programs introduced during Stalin's government. He expressed sadness over the election result and questioned the decision of voters who benefited from these initiatives.