Posts

Showing posts with the label Raghu interview

நடுத்தெருவுல நிக்கப்போறாங்க! உச்சகட்ட கோபத்தில் பேசிய நபர்!

Image
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த மூதாட்டியான ரகு என்பவர் நியூஸ் தமிழ் 24x7 சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசின் நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், மக்களை ஏமாற்றி வாக்கு கேட்டவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். பேட்டியில் ரகு அவர்கள் கூறியதாவது: “தீய சக்தி, தீய சக்தின்னு சொன்னீங்களே... இவங்க இவ்வளவு நல்ல திட்டங்கள்ல இவ்வளவு பலன்களை வாங்கிட்டு, ஸ்டாலினை ஏமாத்துனீங்களே! முதுகுல குத்துறீங்களே... இது உங்களுக்கு மனசாட்சி இருக்குதா?” என்று கேள்வி எழுப்பினார். மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய அவர், “மக்கள் நலத் திட்டங்கள் ஸ்டாலின் சார் தமிழக முதல்வராக எவ்வளவோ கொண்டு வந்தார். அத்தனையும் நிறுத்தப் போறாங்க. பெண்களுக்கு இலவச பஸ் விட்டார் – ஸ்டாப். குழந்தைகளுக்கு பள்ளி சத்துணவு, காலை உணவு திட்டம்... ஒன்றா இரண்டா? அன்பில் மகேஷ் பொய்யாமணி கல்வி அமைச்சராக எல்லா பிள்ளைகளும் படிக்க வரணும்னு ஊக்கப்படுத்தி என்னவெல்லாம் கொடுத்தாரு... அத்தனையும் வாங்கிட்டு முதுகில் குத்துறீங்களே! உங்களுக்கு மனசாட்சி இருக்கா?”...