கான்பூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில், அமைதியான ஒரு தனி பங்களா. அங்கு வசித்து வந்தவர் ரம்யா (38). பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ரம்யா, தன் அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் பலரின் கவனத்தை ஈர்த்தவர்.
ஆனால். அவரது ஜாதகத்தில் இளம் வயதிலேயே விதவையாகும் தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறியதால், பல நல்ல வரன்கள் வந்தும் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

குடும்ப ஜோதிடர் சொன்ன ஒரு கொடூர யோசனையே ரம்யாவின் வாழ்க்கையை இருண்ட பாதையில் தள்ளியது. பெண்களுக்கு இத்தகைய தோஷத்திற்கு எந்த பரிகாரமும் இல்லை என்பதால், 38 வயதை எட்டியும் ரம்யா திருமணமாகாமல் இருந்தார்.
அவரது வீட்டில் நடைபெறும் டியூஷன் வகுப்புக்கு வரும் கல்லூரி மாணவன் கார்த்திக் (21) அவர்மீது அதீத ஈர்ப்பு கொண்டிருந்தான். கார்த்திக்கின் பார்வையும், அவரை இம்ப்ரஸ் செய்யும் முயற்சிகளும் ரம்யாவுக்கு தெரிந்திருந்தது.
“ஆசிரியர், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களைப் போன்றவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என வயது கோளாறில் கார்த்திக் சொன்ன வார்த்தைகளை ரம்யா கவனமாகக் கேட்டார்.
தன் தோஷத்தைப் போக்க இந்த மாணவனைப் பயன்படுத்தலாம் என நினைத்த ரம்யா, தன் நெருங்கிய ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார். “அவனைத் திருமணம் செய்து உல்லாசமாக இருந்து, பின் தீர்த்துக்கட்டினால் உன் தோஷம் தீர்ந்துவிடும்.
திருமணம் நடப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது” என ஜோதிடர் சொன்னதாகக் கூறி, ரம்யா தன் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார்.
ஒரு நாள் மாலை, இனிய வார்த்தைகளால் கார்த்திக்கை தன் பங்களாவுக்கு அழைத்துச் சென்றார் ரம்யா. காட்டுப் பகுதியில் தனிமையாக இருந்த அந்த வீட்டில், “இன்று நாம் திருமணம் செய்துகொள்வோம்” எனக் கூறி, கார்த்திக்கின் கையைப் பிடித்து தாலி கட்டச் சொன்னார்.
அதிர்ச்சியில் இருந்தாலும், ஆசிரியரின் மீது கொண்ட ஈர்ப்பால் கார்த்திக் அதைச் செய்தான். அன்றிரவு இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அந்த இரவு, பங்களாவின் பெரிய படுக்கையறையில் மெல்லிய விளக்கொளி மட்டும் எரிந்துகொண்டிருந்தது. ரம்யா தன் அழகான புன்னகையுடன் கார்த்திக்கை அருகில் அழைத்தார். இருவரும் முதலில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அவரது கனிவான குரலும், மென்மையான தொடுகைகளும் கார்த்திக்கின் இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்தன. ரம்யா தன் கைகளால் அவனது முகத்தை வருடினார். “இன்று முதல் நீ என் உயிர்த் துணை.. உன் உயிர் எனக்கு தான்” என்று மெதுவாகக் கூறி, அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
கார்த்திக் ரம்யாவின் அழகை நெருக்கத்தில் உணர்ந்தான். இருவரும் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக்கொண்டனர். அவர்களின் உடல்கள் ஒன்றோடொன்று பின்னி, மெல்லிய இசையைப் போன்ற இதமான தருணங்கள் நீண்டன.
கார்த்திக்கை இன்னும் சில மணி நேரத்தில் தீர்த்து கட்டப்போகிறோம் என்ற பயம் இருந்தாலும், முதலில் தன்னுடைய இளமையின் பசிக்கு விருந்து வைத்துவிடலாம் என மும்முரமாக இறங்கிய ரம்யாவின் மென்மையான வருடல்களும், கார்த்திக்கின் உற்சாகமான பதிலுரைகளும் அந்த அறையை இன்பத்தின் புகலிடமாக மாற்றின.
இருவரும் ஒருவருக்கொருவர் முழு மனதுடன் தங்களைப் பகிர்ந்துகொண்டனர். நேரம் போவதே தெரியாமல், அந்த இரவு முழுவதும் அவர்களுக்கு இதமான, நெருக்கமான தருணங்களாகக் கடந்தது.
ரம்யா தன்னுடைய பசி தீர விருந்தை கொண்டாடினாள், கார்த்திக்கின் இளமையான உற்சாகமும் இணைந்து, அவர்களை ஒரு இனிய கனவுலகில் மிதக்கச் செய்தது. ஆனால், அந்த இன்பத்தின் நடுவிலும் கார்த்திக்கின் மனதின் ஒரு மூலையில் சிறு சந்தேகம் மெல்ல எழத் தொடங்கியது..
நள்ளிரவுக்குப் பிறகு கார்த்திக்குக்கு ஏதோ தவறு நடக்கப் போகிறது என மனம் எச்சரித்தது. “ஏன் இந்த தனிமையான இடத்துக்கு அழைத்து வந்தார்? இந்த நேரத்தில் ஏன் திருமணம்?” என கேள்விகள் அவனுக்குள் எழுந்தன.
ரம்யாவின் நடவடிக்கைகள் சந்தேகத்தை அதிகரித்தன. அங்கு வந்திருந்த இரண்டு உறவினர்களின் நடவடிக்கைகள் அவர் தன்னைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்தான் கார்த்திக். வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக பார்த்த போது ஒரு அடர்ந்த புதருக்கு அருகே ஒரு ஆளை புதைக்க தேவையான அளவுக்கு குழி வெட்டப்பட்டிருந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தான்.
ரம்யா முன்னரே திட்டமிட்டிருந்தபடி, கார்த்திக்கின் அனைத்து ஆடைகளையும் எடுத்து ஒரு அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். “ஆடையின்றி அவன் வெளியே செல்ல மாட்டான்” என நம்பினார்.
ஆனால் உயிருக்குப் பயந்த கார்த்திக், ரம்யா கவனக்குறைவாக இருந்த நேரத்தில் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு குதித்து, காட்டுப் பகுதியில் ஓடத் தொடங்கினான்.
அதிகாலை 03:30 மணி. குளிரில் நடுங்கியபடி, ஆடையின்றி வெறுங்காலுடன் கார்த்திக் சாலைக்கு வந்தான். வழியில் கைக்கு எட்டும் தூரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பேனரைப் பிய்த்து இடுப்பில் சுற்றிக்கொண்டு, வியர்க்க விறுவிறுக்க ஓடினான். அந்த நேரத்தில் வந்த போலீஸ் வாகனம் அவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது.
போலீசார் அவனை அழைத்து அமர வைத்து, “என்ன நடந்தது?” எனக் கேட்டனர். முதலில் தண்ணீர் குடுங்க சார் என்றான் கார்த்திக், ஒரு பெட்ஷீட்டைச் சுற்றிக்கொண்டு நடந்த அனைத்தையும் விவரித்தான்.
உடனடியாக அந்தப் பங்களாவுக்கு சென்ற போலீசார், அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்தனர். ஆனால், திருமண சடங்குகளின் அடையாளங்கள், வீட்டின் பின்னால் வெட்டப்பட்டிருந்த குழி மற்றும் பிற தடயங்கள் இருந்தன.
தொடர்ந்த விசாரணையில் ரம்யா கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு ஜோதிடர்கள் மற்றும் உறவினர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். “சற்று ஏமாந்திருந்தால் நான் உயிரோடு இல்லாமல் போயிருப்பேன். சரியான நேரத்தில் தப்பி ஓடிவந்தேன்” என கார்த்திக் போலீசாரிடம் கூறினான்.
இந்த சம்பவம் பள்ளி ஆசிரியை ஒருவரின் கொடூர திட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. ஜோதிட நம்பிக்கையின் பெயரால் ஒரு இளைஞனின் உயிரைப் பறிக்க முயன்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் போன்ற இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் இது நினைவூட்டுகிறது.
இது 2018-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
English Summary : 38-year-old unmarried school teacher, facing marriage delays due to horoscope concerns, developed a close bond with her college tuition student. Following an astrologer's suggestion, she arranged a private ceremony at her forest bungalow where they spent an intimate night together. The student later sensed danger, escaped, and reached the road for help. Police investigated and arrested the teacher along with her associates.இதையும் படிங்க :
இதையும் படிங்க :