தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளான திரிஷா கிருஷ்ணன் மற்றும் நயன்தாரா இடையே பல ஆண்டுகளாக நட்பு பகையாக மாறியது என்ற வதந்திகள் பரவி வந்தன.

குறிப்பாக ‘குருவி’ படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்த வாய்ப்பை நடிகை திரிஷா தட்டிப்பறித்தார் என கூறப்பட்டது. இதனால், திரிஷா-நயன்தாரா இடையே பகை உருவாகியுள்ளது என வதந்திகள் பரவின.
ஆனால் இரு நடிகைகளும் தங்களுக்கிடையேயான உறவு வலுவாக இருப்பதாகவும், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம் என பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்.
அது உண்மை தான்.. நயன்தாரா பகையைப் பற்றிதிரிஷா
இந்தியா க்ளிட்ஸ் (Indiaglitz) சேனலுக்கு அளித்த பழைய பேட்டியில் ‘தக் லைஃப்’ பட நடிகை திரிஷா இந்த விவகாரம் குறித்து பேசினார்.

“எங்களுக்கிடையே எந்தவித பகையும் இல்லை. பெரும்பாலான இந்த ‘சோ-கால்ட்’ பிரச்சினைகள் மீடியா உருவாக்கியவைதான்” என்று கூறினார். மேலும், “நயன்தாரா இந்தத் துறையில் ஒரு தசாப்த காலமாக இருக்கிறார்.
எங்களுக்கிடையே சில தனிப்பட்ட காரணங்கள் மற்றும் எண்களின் பொதுவான நண்பர்கள் காரணமாக சிறிய முரண்பாடு ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நாங்கள் ஒருபோதும் சண்டையிடவில்லை” என்றும் திரிஷா விளக்கினார்.
ஆனால்,.. எப்போதாவது பண்ணுவேன்..
நயன்தாராவும் இந்த ரூமர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “ என்னை பற்றி வதந்திகளுக்கு பதில் கொடுக்க வேண்டுமென்றால், நான் பேட்டி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.. ஆனால், எப்போதாவது தான் பேட்டி தருவேன்.அதனால்தான் பல பிரச்சினைகள் வருகின்றன” என்று கூறினார்.

“திரிஷாவுடன் போட்டி, கேட்ஃபைட் உள்ளிட்ட பிரச்சினைகள் என்று பல செய்திகள் வந்தன. ஆனால் அவை அனைத்தும் உண்மையல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.
இருவரும் இணைந்து வெளியிட்ட போஸ்ட்
இந்த ஆண்டு ஜனவரியில் திரிஷா மற்றும் நயன்தாரா தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு கூட்டு போஸ்ட் வெளியிட்டு உலகுக்கு தங்கள் நட்பை நிரூபித்தனர்.

துபாயில் யாட் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரு நடிகைகளும் கருப்பு உடையில் அருகருகே நின்று, சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் அழகாகத் தெரிந்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி, ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நட்பு உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, பழைய ரூமர்கள் இப்போது முழுமையாக முடிவுக்கு வந்துள்ளன. திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க :
இதையும் படிங்க :