அது உண்மை தான்.. ஆனால்,.. எப்போதாவது பண்ணுவேன்.. நயன்தாரா ஓப்பன் டாக்..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளான திரிஷா கிருஷ்ணன் மற்றும் நயன்தாரா இடையே பல ஆண்டுகளாக நட்பு பகையாக மாறியது என்ற வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக ‘குருவி’ படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்த வாய்ப்பை நடிகை திரிஷா தட்டிப்பறித்தார் என கூறப்பட்டது. இதனால், திரிஷா-நயன்தாரா இடையே பகை உருவாகியுள்ளது என வதந்திகள் பரவின. ஆனால் இரு நடிகைகளும் தங்களுக்கிடையேயான உறவு வலுவாக இருப்பதாகவும், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம் என பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர். அது உண்மை தான்.. நயன்தாரா பகையைப் பற்றிதிரிஷா இந்தியா க்ளிட்ஸ் (Indiaglitz) சேனலுக்கு அளித்த பழைய பேட்டியில் ‘தக் லைஃப்’ பட நடிகை திரிஷா இந்த விவகாரம் குறித்து பேசினார். “எங்களுக்கிடையே எந்தவித பகையும் இல்லை. பெரும்பாலான இந்த ‘சோ-கால்ட்’ பிரச்சினைகள் மீடியா உருவாக்கியவைதான்” என்று கூறினார். மேலும், “நயன்தாரா இந்தத் துறையில் ஒரு தசாப்த காலமாக இருக்கிறார். எங்களுக்கிடையே சில தனிப்பட்ட காரணங்கள் மற்றும் எண்களின் பொதுவான நண்பர்கள் காரணமாக சிறிய முரண்பாடு ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நாங்கள் ஒருபோதும் சண்டையிடவி...